சரிவில் தொடங்கியது பங்குச்சந்தை ; ரூபாய் மதிப்பும் குறைந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60.33 புள்ளிகள் சரிந்து 19855.62 என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.25 புள்ளிகள் சரிந்து 5889.05 என்ற நிலையிலும் இருந்தன.

அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி இன்னும் சரியாகாத நிலையில், அதன் தாக்கம் ஆசிய சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியிருப்பதாக பங்குவர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து 61.65 என்ற நிலையில் இருந்தது. இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலர் தேவை அதிகரித்துள்ளதால் ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 61.44 என்ற நிலையில் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE