அதிக அளவு கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாருதி சுஸுகி, கொரியாவைச் சேர்ந்த ஹூன்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்ளின் தயாரிப்புகள் நவம்பர் மாதத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.
மாருதி நிறுவனம் நவம்பர் மாத விற்பனை 10.7 சதவீதம் சரிந்தது. மொத்தம் 92,140 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவன வாகன விற்பனை 1,03,200 ஆகும்.
உள்நாட்டில் இந்நிறுவனம் 85,510 கார்களை விற்பனை செய்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 90,882 கார்களை விற்பனை செய்திருந்தது. நிறுவனத்தின் ஏற்றுமதி 46.2 சதவீதம் சரிந்து 6,530 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 12,318 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது.
ஹூன்டாய் நிறுவன கார் விற்பனை நவம்பர் மாதத்தில் 10.9 சதவீதம் சரிந்தது. இந்நிறுவனம் 49,681 கார்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு விற்பனை 3.6 சதவீதம் சரிந்து 33,501 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இது 34,751 ஆக இருந்தது.
ஏற்றுமதி 23 சதவீதம் சரிந்து 16,180 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு 21,011 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பண்டிகைக்குப் பிறகு சந்தையில் காணப்பட்ட தேக்க நிலையே விற்பனை சரிவுக்குக் காரணம் என்று விற்பனை பிரிவின் மூத்த தலைவர் ராகேஷ் ஸ்ரீ வாத்ஸவா தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் கார் விற்பனை 39 சதவீதம் சரிந்தது. ஏற்றுமதியையும் சேர்த்து மொத்தம் 66,500 வாகனங்ளை இந்நிறுவனம் நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 76,823 வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவன உள்நாட்டு விற்பனை 40 சதவீதம் சரிந்து 37,192 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 62,354 ஆகும்.
ஏற்றுமதி 4,146-லிருந்து சரிந்து 3,671 ஆகக் குறைந்தது.
இந்நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனை 26,816 ஆக இருந்தது. எல்சிவி வாகன விற்பனை 19,993 ஆகும். நடுத்தர கனரக வர்த்தக வாகன விற்பனை 6,823 ஆகும்.
கார்களின் விற்பனை 10,376 ஆகக் குறைந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நானோ, இன்டிகா மற்றும் இன்டிகோ விற்பனை 7,910 ஆகும். சுமோ, சபாரி, அரியா, வெஞ்சர் ஆகிய வாகனங்களின் விற்பனை 2,466 ஆக இருந்ததாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
டொயோடா இந்நிறுவன வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்தது. இந்நிறுவனம் மொத்தம் 12,748 கார்களை விற்பனை செய்துள்ளது.
முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனம் 11,357 வாகனங்களை விற்பனை செய்தது.
உள்நாட்டில் இந்நிறுவன வாகன விற்பனை 10,208 ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 10,352 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் 2,540 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது.
ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை நவம்பரில் 19 சதவீதம் அதிகரித்து 12,050-ஐத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 10,155 கார்களை விற்பனை செய்திருந்தது.
நவம்பரில் இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 33 சதவீதம் அதிகரித்து 7,909 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இது 5,944 ஆக இருந்தது.
இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 4,141 ஆகும்.
ஹோண்டா கார்களின் விற்பனை 151 சதவீதம் உயர்ந்து 9,322-ஐத் தொட்டது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 3,711 ஆக இருந்தது.
மொத்தம் 806 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. ஹோண்டா அமேஸ் கார்களுக்கு பெரும் வரவேற்பு இருந்ததே விற்பனை அதிகரிப்புக்குக் காரணம் என்று நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago