கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த நிதி ஆண்டில் 4,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது. இந்த தொகை புதிய மாடல்களை உருவாக்குவது, மார்க்கெட்டிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு அடுத்த நிதி ஆண்டுக்கான திட்டங்களுக்கு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த நிறுவனம் கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் செலிரியோ என்ற காரை அறிமுகப் படுத்தியது. மேலும் எஸ்.யூ.வி. காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த கார் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி யாணாவில் 600 ஏக்கர் பரப்பளவில் டெஸ்ட் டிராக் உள்ளிட்ட வசதிக ளுடன் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இருக்கிறது. இதனால் புதிய மாடல் கார்களை சந்தையில் வேகமாக மாருதி அறிமுகப்படுத்தும்.
இந்த மந்த நிலையான சந்தையி லும் கூட, கிராமப்புற பகுதியில் இந்த நிறுவனத்தின் விற்பனை முன்னணியில் இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் இந்த நிறுவனத் தின் விற்பனை 1.8 சதவீதம் அதிகரித்தது.
கடந்த வருட பிப்ரவரியில் இந்நிறுவனம் 97,955 கார்களை உள்நாட்டில் விற்பனை செய் தது. இப்போது விற்பனை 1.8 சதவீதம் அதிகரித்து 99,758 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கிடையே சுசூகி நிறுவனம் தனியாக தொழிற்சாலை அமைப் பதை சிறுமுதலீட்டாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். குறிப் பாக இன்ஷூரன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்
சந்தை ஒழுங்குமுறை ஆணைய மான செபியிடம் இது குறித்து சிறுமுதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க சொல்லி கேட்டி ருக்கிறது.
எல்.ஐ.சி. நிறுவனம் மாருதி சுசூகி நிறுவனத்தில் 7 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி. இந்நடவடிக்கை தொடர்பாக மாருதி நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago