சென்னையில் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி

By டி.கே

கட்டுமானத் துறைக்கு 2013ஆம் ஆண்டு சிக்கல் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. பொருளாதார மந்த நிலை, ரூபாய் வீழ்ச்சி, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு என நிறைய விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். சென்னையில் நடப்பு 2வது காலாண்டில் 48 ஆயிரம் வீடுகள் விற்கப்படாமல் இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்தன. இந்நிலையில் சென்னையில் 2013ஆம் ஆண்டில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், மனைகள் விற்பனை 33 சதவீதம் குறைந்திருந்தாக ‘நைட் ஃபிராங்க்’ என்ற ஆய்வு நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டில் மட்டுமல்ல அதற்கு முந்தைய ஆண்டிலும் விற்பனை குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2012ஆம் ஆண்டில் 35 லட்சம் சதுர அடி கட்டிடங்கள் விற்கப்பட்டதாகவும் இது 2011ஆம் ஆண்டை விட 15 சதவீதம் குறைவு என்றும் அந்நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. வீடுகள் மட்டுமின்றி அலுவலகப் பயன்பாட்டு கட்டிட விற்பனையும் 23 சதவீதம் குறைந்திருப்பதாக நைட் ஃபிராங்க் ஆய்வு கூறுகிறது.

விலைவாசி அதிகரிப்பு, கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவை சென்னையில் ரியல் எஸ்டேட் மந்த நிலைக்குச் செல்லக் காரணம் எனவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதேசமயம் வீடுகள் விற்பனை சென்னையில் குறைந்திருந்த போதும் விலை மட்டும் குறையவில்லை. மாறாக அவற்றின் விலை 5 முதல் 7 சதவீதம் வரை அதிகரித்ததாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்