பிரெக்ஸிட்: ஒரே நாளில் 2 லட்சம் கோடி டாலர் இழப்பு

By ராய்ட்டர்ஸ்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது.

ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன. லண்டன் எப்டிஎஸ்இ சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, மற்றும் சீனாவின் மத்திய வங்கி ஆகியவை தெரிவித்திருக்கின்றன.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்