ஹிமன்ஷு கபானியா - இவரைத் தெரியுமா?

$ ஆதித்ய பிர்லா குழுமத்தின் அங்கமான ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

$ டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், 1983ல் ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் பி.இ பட்டம் பெற்றார்.

$ டிசிஎம் டொயோடா நிறுவனத்தில் பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

$ ஜப்பானுக்கு பயிற்சிக்கு சென்றபோது விற்பனைப் பிரிவில் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து டொயோடா நிறுவனத்தில் கர்நாடக மாநில விற்பனை பிரிவு மேலாளராக பொறுப்பேற்றார். 1988-ம் ஆண்டு பெங்களூரில் உல்ள ஐஐஎம்-மில் சேர்ந்து நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

$ குஜராத் மாநிலத்தில் ஏடி அண்ட் டி நிறுவனம் மற்றும் பிர்லா குழுமத்தின் தொலைத் தொடர்பு சேவை வட்டார மேலாளராக இருந்தபோது சிறப்பான சேவை அளித்தால் மக்கள் கூடுதல் பணம் செலுத்த தயங்கமாட்டார்கள் என்ற தனது கணிப்பு தவறானதை உணர்ந்தார்.

$ தவறிலிருந்து பாடம் கற்ற இவர், பிர்லா குழுமம் தொடங்கிய ஐடியா செல்லுலரின் தலைவராக நியமிக்கப்பட்டு பல்வேறு சலுகைகளை வழங்கி நிறுவனத்தின் லாபத்தை மூன்று மடங்காக உயர்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE