ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃ பண்ட் விற்பனை : செபி

இணையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரி் துக்கொண்டே வருகிறது. அதனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்டை விற்பனை செய்வதை அதிகரிக்கலாம் என்று செபி அறிவுறுத்தி இருக்கிறது.

ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள், வங்கி சேவையை பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது, இதேபோல மியூச்சுவல் ஃபண்ட்களையும் இதே முறையில் விற்பனை செய்வதை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் பலரையும் சென்றடையும், குறிப்பாக இளை ஞர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் சென்றடையும்.

மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட கால கொள்கைகளில் இந்த ஆலோசனை சொல்லப்பட்டி ருப்பதாக தெரிகிறது. செபி இயக்குநர் குழு இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. விரை வில் நீண்ட கால கொள்கை வெளி யிடப்படும் என்று தெரிகிறது.

தற்போதைய நிலையில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆன்லைன் சேவையை கொடுத்து வந்தாலும், அந்த சேவையை இன் னும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று செபி சொல்லி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE