இந்திய ஏற்றுமதி சரிவு

By செய்திப்பிரிவு

தொடர்ந்து 7 மாதங்களாக ஏறுமுகம் கண்டு வந்த இந்திய ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய ஏற்றுமதி 3.67 சதவீதமாகக் குறைந்தது. பிப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானம் 2,568 கோடி டாலராகும். அதே சமயம் தங்கம் இறக்குமதி செய்வது குறைந்ததால் ஏற்றுமதி-இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகப் பற்றாக்குறை 813 டாலராகக் குறைந்தது. வர்த்த கப் பற்றாக்குறை கடந்த ஐந்து மாதங்களில் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும். தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 71.42 சதவீதம் குறைந்து 163 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் தங்கம், வெள்ளி இறக்குமதி அளவு 571 கோடி டாலராகும்.

பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி 17.09 சதவீதம் சரிந்து 3,381 கோடி டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதியும் 3.1 சதவீதம் குறைந்து 1,360 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதி ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கை எட்டுவது சிரமம் என்று இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு (எப்ஐஇஓ) தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கு 32,500 கோடி டாலராகும். இதில் 1,500 கோடி டாலர் முதல் 1,800 கோடி டாலர் வரை குறையலாம் என்று எப்ஐஇஓ தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்குக் கடன் கிடைப்பது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. ஏற்றுமதி யாளர்களுக்கு அரசிடமிருந்து வர வேண்டிய வரி பாக்கித் தொகை ரூ. 20 ஆயிரம் கோடி வரையில் உள்ளது. சர்வதேச அளவில் இந்திய தயாரிப்புகளுக்கான தேவை இருந்தபோதிலும் அதை ஈடு கட்ட முடியவில்லை. இதற்கு போதுமான அளவு கடன் கிடைக் காததே என்று எப்ஐஇஓ தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய ஏற்றுமதி 13.47 சதவீ தத்தை எட்டியது. அதற்குப் பிறகு ஒற்றை இலக்கத்திலேயே இந்திய ஏற்றுமதி உள்ளது.

பிப்ரவரி மாதத்தில் பெட் ரோலியம், இன்ஜினீயரிங் பொருள், பார்மா ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் ஏற்றுமதி 4.79 சதவீதம் அதிகரித்து 28,270 கோடி டாலரைத் தொட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் இறக்குமதி 8.65 சதவீதம் அதிகரித்து 41,086 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வர்த்தக பற்றாக் குறை 12,800 கோடி டாலராக உள்ளது.

ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் அல்லாத பிற பொருள்களின் இறக்குமதி 13.4 சதவீதம் சரிந்து 25,902 கோடி டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு 0.8 சதவீதம் அதிகரித்து 15,063 கோடி டாலராக உயர்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்