ரூபாய் மதிப்பு கடும் சரிவு

By ராய்ட்டர்ஸ்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து 61.75 ரூபாயாக இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலைமையில் ரூபாயின் மதிப்பு இருக்கிறது.

வளரும் நாடுகளுக்கு எதிராக டாலரின் மதிப்பு தொடர்ந்து பலமடைந்து வருவதன் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் மதிப்பில் 61.83 ரூபாய் வரை அதிகபட்சமாக சரிந்தது. செப்டம்பர் மாதம் மட்டும் 2.1 சதவீத அளவுக்கு ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் ரூபாய் மதிப்பு உயர்ந்து வந்தாலும், மத்தியில் சரிய ஆரம்பித்தது. அமெரிக்க பொருளாதார நிலவரங்கள் சிறப்பாக இருப்பது, வட்டி விகிதங்கள் விரைவில் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கையாலும் டாலர் பலமடைந்து ரூபாய் சரிந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யாததால், அந்நிய முதலீடு குறையும் என்பதும் ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு ஒரு காரணமாகும். ரூபாய் மதிப்பு மட்டுமல்லாமல் ஜப்பான் கரன்ஸியான யென் மற்றும் ஐரோப்பிய யூனியன் கரன்ஸியான யூரோ ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்