பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தலைவர் பதவியையும், நிர்வாக இயக்குநர்/ சி.இ.ஓ. பதவிகளையும் பிரிக்க வேண்டும் என்று செபி விரும்பியது. இதன் மூலம் தரமான நிர்வாகம் இருக்கும் என்று செபி நினைத்தது.
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்/தலைமைச் செயல் அதிகாரி ஆகிய இரண்டு பதவிகளை ஒருவரே வைத்தி ருக்கும்போது, அவருக்கு அளவில்லாத அதிகாரம் கிடைக்கிறது. இதனைப் பிரிப்பதன் மூலம் நிர்வாகம் திறமையாக இருக்கும் என்று செபி கருதியது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட இந்த நிலைமைதான் இருக்கிறது. இதுகுறித்து பலதரப்பட்ட நிறுவனங்களின் கருத்தையும் செபி கேட்டது. செபியின் விருப்பத்துக்கு ஏற்பவே, இரண்டு பதவிகளை பிரிக்க வேண்டும் என்று பலதரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால், செபியின் ஆலோசனைக் குழு (பி.எம்.ஏ.சி.) மேலே குறிப்பிட்ட இரண்டு பதவிகளையும் கட்டாய மாக பிரிக்கத் தேவை இல்லை என்று தெரிவித்திருக்கிறது. ஆலோசனைக் குழுவின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட செபி, தலைவர் மற்றும் தனிப்பட்ட இயக்குநர்கள் அதிகம் இருக்கும் பட்சத்தில், இந்த இரண்டு பதவிகளையும் கட்டாயமாக பிரிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்திருக்கிறது.
அதே சமயம், இந்த இரண்டு பதவிகளையும் இரண்டாக பிரிக்கும் பட்சத்தில் தரமான நிர்வாகம் இருக்கும் என்றும் செபி தெரிவித்திருக்கிறது. பெரிய தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த பதவிகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. மேலைநாடுகளில் பல நிறுவனங்கள் இந்த இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியாக ஆட்களை நியமித்திருக்கிறார்கள் என்று செபியின் ஆலோசனைக் குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago