ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை கால் சதவீதம் (.25%) உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக கடனுக்கான வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் 8 சதவீதமாகும். வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் 97 புள்ளிகள் சரிந்தது.
கடந்த செப்டம்பரில் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றார். இதுவரை நான்கு நிதிக் கொள்கைகளை அவர் தாக்கல் செய்துள்ளார். மூன்று முறை கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளார். இதுவரை மொத்தம் 0.75 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி விகித உயர்வால் வங்கிகளில் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன் பெற்றவர்கள் தவணைக் காலத்தை (இஎம்ஐ) கூடுதலாக அல்லது கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல கடன் பெற்றுள்ள நிறுவனங்களுக்கும் இது பாதிப்பாக அமையும்.
ரிவர்ஸ் ரெபோ எனப்படும் வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இப்போது 7 சதவீதமாக உள்ளது..
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய இருப்பு அளவு (சிஆர்ஆர்) 4 சதவீதமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ஜினல் ஸ்டான்டிங் ஃபெஸிலிட்டி வட்டி 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 9 சதவீதமாக இருக்கும் என்று ராஜன் அறிவித்தார்.
முந்தைய வட்டி விகித அளவே தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கால் சதவீதம் வட்டியை உயர்த்தி அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ரகுராம் ராஜன். நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் நோய் என்று பணவீக்கத்தை வர்ணித்துள்ள அவர், அதைக் கட்டுப்படுத்துவதுதான் தன் முன்னுள்ள பிரதான பணி என்று குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ராஜன், 2014-15-ம் நிதி ஆண்டில் இது 5.5 சதவீதமாக உயரும் எனக் குறிப்பிட்டார். உர்ஜித் படேல் குழு பரிந்துரையின்படி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு இனி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட உள்ளது என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago