விநியோக முறையில் உள்ள பிரச்னைகளே வெங்காய விலை உயர்வுக்குக் கார ணம் என பொருளாதார விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசனைக்குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்து ள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வெங்காயமோ மற்ற காய்கறிகளோ எதுவாக இருப்பி னும் அவற்றின் விலை உயர்வுக்கு விநியோக தரப்பிலுள்ள பிரச்னை கள்தான் காரணம். பொருள்களின் அளிப்பை அதிகரித்தல், சந்தைச் செயல்பாடுகளை மேம்படுத்துதல், தற்போதுள்ள பொருள்கள் சமமாக நுகர்வோருக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட விநியோகத் தரப்பு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வெங்காய விலை உயர்வு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது. தற்காலிகமானதுதான். எப்போதுமே தற்காலிக விலை வாசி உயர்வு இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பொருள்க ளின் வரத்து அதிகரித்து விட்டால், விலை குறைந்து விடும். என்றார்.
மகாராஷ்டிரத்துக்கு இழப்பீடு
கன மழையால் சாகுபடிப் பயிர்கள் பாதிக்கப்பட்ட மகா ராஷ்டிர மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ. 921.98 கோடி இழப்பீடு ஒதுக்கியுள்ளது. வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தலைமையி லான உயர்நிலை அளவிலான குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில், மகாராஷ்டிர மாநி லத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ. 921.98 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார். தேசிய பேரிடர் மேலாண்மை நிதித் தொகுப்பிலிருந்து இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மழையால் பாதிப்புக்குள்ளான சாலைகள், வீடுகள் உள்ளிட்டவற்றுக்கான இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என்ற மகாராஷ்டிர அரசின் கோரிக்கை குறித்து கேட்டபோது, “இது தொடர்பாக திட்டக்குழுவுடன் ஆலோசித்து நிதி ஒதுக்கப்படும்’’ என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஷிண்டே, மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.