பொருளாதார வளர்ச்சி 4.9%

By செய்திப்பிரிவு

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டிபி) நடப்பு நிதி ஆண்டில் 4.9 சதவீதமாக இருக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டினால் அதுவே சிறந்ததாக இருக்கும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உற்பத்தித் துறை வளர்ச்சி -0.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.1 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று முன்னர் கணிக்கப்பட்டது. வேளாண் துறையில் கடந்த ஆண்டு 1.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி 4.6 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானத் துறையும் சிறப்பாகச் செயல்படும் என்று நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு 1.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி இந்த ஆண்டு 1.7 சதவீதமாக உயரும் என்று நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு சேவைத் துறை வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. அது இப்போது 6.9 சதவீதமாக இருக்கும்.

முந்தைய நிதி ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் வளர்ச்சி 4.5 சதவீதம் என மதிப்பிட்டது. மன்மோகன் சிங் அரசில் கடந்த காலங்களில் எட்டப்பட்ட மிகக் குறைந்த வளர்ச்சி இதுவாகும்.

திருத்தப்பட்ட பொருளாதார மதிப்பீடு பொருளாதார வளர்ச்சியில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை சமாளிக்க இது உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்