பிர்லா சன்லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இப்போது ரூ.1.97 லட்சம் கோடி சொத்துகளை கையாளுகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட போது (1994-ம் ஆண்டு) ஏழாவது பணியாளராக சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். கடந்த 2009-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். கடந்த வாரம் `ஒன் நேஷன்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். பணமதிப்பு நீக்கம், பட்ஜெட் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து..
தஞ்சாவூர் அருகே உள்ள மெலட்டூரில் பிறந்தவன். பிஎஸ்இ முடித்துவிட்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து எதாவது ஒரு வேலை செய்வதாகத்தான் திட்டம். என்னுடைய உறவினர் ஒருவர் மும்பையில் இருந்தார். அங்கு சென்று ஏதாவது வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். உறவினர் நிறுவனத்தில் சில வருடம் நிதித்துறையில் வேலை பார்த்தேன்.
அப்போது நிறைய வேலைவாய்ப் புகள் குறித்த தகவல்கள் வரும். கனரா வங்கியின் துணை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு ஜிஐசி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் சேர்ந்தேன். இந்த நிறுவனத்தில் பணி யாற்றிய இரு வருடங்களில் கற்றுக் கொண்டதுதான் வாழ்க்கைக்கு அடிப் படை. அதனை தொடர்ந்து என்னுடைய முன்னாள் அதிகாரி பிர்லா மியூச்சுவல் பண்டில் இணைந்தார். அவர் என்னை அழைத்ததால் பிர்லாவில் இணைந்தேன் என தன்னுடைய ஆரம்ப கால வாழ்க் கையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
விரைவில் ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சென்று 2 மாதம் படிப்பதற்கு திட்டமிட்டு வருகிறீர்கள். சுமார் ரூ.2 லட்சம் கோடியை கையாண்ட பிறகும் நிர்வாக படிப்பு தேவை என நினைக்கிறீர்களா?
எவ்வளவு கோடியைக் கையாண் டாலும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நம்பிக்கை உடை யவன். வகுப்பில் உட்கார்ந்து படிப்பது போல இருக்காது. வேலை நெருக்கடி இல்லாமல் அமைதியாக படிக்கும்போது மேலும் புதிய விஷயங்கள் கிடைக்கும். அடுத்த கட்டத்துக்கு செல்வதற்குப் பயன்படும்.
நீங்கள் முதலீட்டு அதிகாரியாக இருந் தவர். இப்போது தலைமைச் செயல் அதி காரி. இரண்டில் எது சவாலான பணி?
தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகும் முதலீட்டு அதி காரியாகவும் தொடர்ந்தேன். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு தலைமைச் செயல் அதிகாரியின் பணிகள் அதிகரித் துக்கொண்டே இருந்ததால், முதலீட்டு அதிகாரி பதவியை விட்டுவிட்டேன். முதலீட்டு அதிகாரியாக இருக்கும்போது முதலீட்டை மட்டும் பார்த்தால் போதும். ஆனால் இப்போது எங்கள் பண்ட் முதலீடு எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாமல், பணியாளர்களைக் கையாளுவது, வாடிக்கையாளர்களைக் கையாளுவது, விரிவாக்கப் பணிகள், அயல் நாடுகளில் உள்ள பிரிவுகளைக் கவனிப்பது, நிறுவனத்துக்கும் துறைக் கும் இடையே பாலமாக இருப்பது என இது முற்றிலும் வேறுமாதிரியான பணி.
உங்கள் நிறுவனத்தின் முதலீட்டு கொள்கை என்ன?
சந்தை மேலே செல்லும் அல்லது சரியும். சந்தையின் போக்குக்கு ஏற்ப அனைத்து பங்குகளும் சரிவதில்லை. அதனால் பங்குகள் தேர்வில் நாங்கள் கவனமாக இருப்போம். இதில் எங்களுக்குள் சில எல்லைகளை உருவாக்கி இருக்கிறோம். இந்த எல்லைக்குள் மட்டுமே பங்குகளைத் தேர்வு செய்வோம். இந்த விதிமுறைக்குள் வராத பங்குகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. உதாரணத்துக்கு சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 300 பங்குகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், அதனைத் தவிர்த்து இருக்கும் பங்குகளை வாங்குவதற்கு முன் அனுமதி வேண்டும்.
நீங்கள் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற சமயத்தில் மியூச்சுவல் பண்ட்களுக்கான நுழைவு கட்டணத்தை செபி ரத்து செய்தது. அப்போதைய மனநிலை என்ன?
என்னுடைய தலைவர் என்னை தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்துவிட்டார். இனி என்னால் திரும்ப செல்ல முடியாது. வேறு வழியில்லை முன்னோக்கித்தான் செல்ல வேண்டும். மேலும் இந்த துறையில் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. சிறப்பான பணியை செய்யும்பட்சத்தில் சந்தையை கைப்பற்ற முடியும் என நினைத்தோம். அதற்கு முன்பு வரை ஒரு அனலிஸ்டாக அலுவலத்தில் இருப்பேன். தலைமைச் செயல் அதிகாரியான பிறகு வாடிக்கையாளர்கள், வினியோகஸ் தர்கள் என நாடு முழுவதும் இருப் பவர்களை சந்திக்க ஆரம்பித்தேன். புராடக்ட் நன்றாக இருந்தாலும், நிறுவனத்தை பற்றிய நல்ல எண்ணத்தை அவர்களிடம் விதைக்க வேண்டி இருந்தது. 2012-ம் ஆண்டு இரண்டாம் கட்ட நகரங்களில் மியூச்சுவல் பண்ட்கள் விற்கும்போது வினியோகஸ்தர்களுக்கு கூடுதல் தொகை வழங்கலாம் என செபி முடிவெடுத்தது. அந்த அறிவிப்பு எங்களுக்கு சாதகமாக இருந்தது.
ஏற்கெனவே பல நிறுவனங்கள் இருக் கின்றன. மேலும் சில புதிய நிறுவனங் கள் சந்தைக்கு வர தயராக இருக்கின்றன? சிலர் விற்கிறார்கள். இத்தனை நிறுவனங் கள் தேவையா? உங்களுக்கு ஏதாவது மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை கையகப் படுத்தும் திட்டம் இருக்கிறதா?
இதுவரை நாங்கள் மூன்று மியூச்சு வல் பண்ட் நிறுவனங்களை வாங்கி இருக்கிறோம். ஆனால் கையகப்படுத்து தல் தொடர்பாக இப்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதே சமயம் நல்ல நிறுவனங்கள் கிடைக்கும் பட்சத்தில் கையகப்படுத்த தயராகவே இருக்கிறோம். அடுத்து இத்தனை நிறுவனங்கள் போதும் என்னும் முடிவுக்கு நாம் வர முடியாது. இந்த துறையின் மீது நம்பிக்கை வைத்து 10 ஆண்டுகள் செயல்பட்டால் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது.
உங்கள் பார்வையில் பணமதிப்பு நீக்கத் தின் தாக்கம் எப்படி இருக்கும்?
ஒவ்வொருவருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. இதில் எது நிஜம் என்று தெரிவதற்கு சில காலம் ஆகும். ஆனால் பெரும்பாலான தொகை வங்கியில் டெபாசிட் செய்யப் பட்டிருப்பதால் வரி வருமானம் அதிகரிப் பதற்காக சாத்தியங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இது ஒரு கடுமையான முடிவு. இந்த முடிவின் பாதிப்புகள் சில மாதங்களுக்கு இருக்கும். அதனை தவிர்க்க முடியாது.
மியூச்சுவல் பண்ட் சார்பாக பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படலாம். அதிக வருமான வரி (தனிநபர் பிரிவு) செலுத்துபவர்களுக்கு 2.5 சதவீதம் வரை வரி குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். கார்ப்பரேட் வரி குறைக்கப்படலாம்.
ராஜிவ்காந்தி காந்தி ஈக்விட்டி திட்டத் தில் வரிச்சலுகைக்காக 50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதனை 80 சி பிரிவுடன் இணைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது 80சி பிரிவில் முதலீட்டு அளவை 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தலாம்.
20 வருடங்களுக்கு மேல் இந்த துறையில் இருக்கிறீர்கள். எந்த காலகட்டம் உங்களுக்கு சவாலாக இருந்தது?
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் கொஞ்சம் சவால் இருக்கும். 1999, 2002, 2008 ஆகிய கால கட்டங்கள் கொஞ்சம் சவாலாக இருந்தன. இந்த காலங்களில் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருந்தன. முதலீட்டாளர்களுக்கு வரு மானம் கொடுத்தாக வேண்டும், அதற் காக ஏற்ற இறக்கமான சூழலில் அதிக ரிஸ்கும் எடுக்க முடியாது. தவிர நாங்கள் ஒரு தவறு செய்தால் அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். இது போன்ற காலகட்டங்களில் எங்களுடைய ரிஸ்க் கினை குறைத்து முதலீட்டை பாதுகாக் கும் வேலைகளை முதலில் செய்வோம்.
தனிப்பட்ட முறையில் உங்களுடைய முதலீடு எங்குள்ளது?
கொஞ்சம் பங்குகளில் முதலீடு செய் திருக்கிறேன். அதை தவிர அனைத்தும் எங்களுடைய மியூச்சுவல் பண்ட்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருகிறேன். கொஞ்சம் ரியல் எஸ்டேட் இருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்வ தில்லை.
மியூச்சுவல் பண்ட் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இப்போதைக்கு சுமார் ரூ.17 லட்சம் கோடியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் கையாளுகின்றன. வரும் 2022-ம் ஆண்டில் இந்த தொகை ரூ.50 லட்சம் கோடியாக உயரும். பணமதிப்பு நீக்கத் துக்கு பிறகு இந்த துறையில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. நாங்கள் இப்போது ரூ.1.97 லட்சம் கோடியைக் கையாளு கிறோம். 2018-ம் நிதி ஆண்டு முடிவில் ரூ.2.75 லட்சம் கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம்.
மொத்த மக்கள் தொகையில் குழந்தைகள் பெரியவர்களை தவிர்த்து 30 கோடி மக்கள் முதலீடு செய்ய முடியும். ஆனால் இப்போது 2 கோடி மக்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த எண் ணிக்கை தொடர்ந்து உயரும்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago