மூன்றாம் காலாண்டு ஜிடிபி 4.7%

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஜி.டி.பி. 4.7 சதவீதமாக இருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை விடக் குறைவாகும். மேலும் நடப்பு நிதி ஆண்டில் இரண்டாம் காலாண்டு காலாண்டு ஜிடிபியை விட 0.1 சதவீதம் குறைவாகும். இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 4.8 சதவீதமாக இருந்தது.

நடந்துகொண்டிருக்கும் நான்காம் காலாண்டில் 5.7 சதவீத வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே மத்திய அரசு கணித்த 4.9 சதவீத வளர்ச்சி சாத்தியமாகும். தற்போதைய நிலையில் 5.7 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்கு என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி விகிதங்களை வரும் மே மாதம் மறுபரிசீலனை செய்வார்கள். மேலும் அந்த சமயத்தில்தான் நான்காம் காலாண்டு முடிவுகளும் வெளியாகும். இந்த சரிவுக்கு உற்பத்தி மற்றும் சுரங்க துறையில் ஏற்பட்டிருக்கும் நெகட்டிவ் வளர்ச்சிதான் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. விவசாயத் துறை 3.6 சதவீதமும், மின் துறை 5 சதவீதமும் வளர்ந்திருக்கிறது.

வல்லுநர்கள் கருத்து

சுஜன் ஹஜ்ரா, பொருளாதார வல்லுநர் ஆனந்த்ரதி

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இல்லை. இந்த எண்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும் கடந்த சில காலாண்டுகளாக இதே திசையில்தான் வளர்ச்சி இருக்கிறது. தற்போது வந்திருக்கும் எண்களைப் பார்க் கும் போது நடப்பு நிதி ஆண்டில் 4.9 சதவீத வளர்ச்சி என்பது சவால்தான். விவசாயம், மின் துறையில் வாய்ப்புகள் இருப்பது போல தெரிந்தாலும், உற்பத்தி உள்ளிட்ட மற்ற துறைகளில் முன்னேற்றம் இல்லை.

அனுபூதி சாஹே, ஸ்டாண்டர்டு சார்டர்ட் வங்கிஎதிர்பார்த்தைவிட வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது. சேவை துறையின் வளர்ச்சி சாதகமாக இருக்கிறது. ஆனால் இதே வளர்ச்சி வரும் நான்காம் காலாண்டிலும் இருக்குமா என்பது கேள்விக்குறி.

நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்கு மத்திய அரசு செலவுகளை குறைத்துவிட்டது. இதனால் நான்காம் காலாண்டில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

மூன்றாம் காலாண்டு முடிவுகளை வைத்து பார்க்கும் போது ஒட்டுமொத்தமாக நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 4.6 சதவீதமாகதான் இருக்க வாய்ப்பு இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி இருக்க வேண்டும் என்றால் நடப்பு காலாண்டில் 6 சதவீத வளர்ச்சியை அடையவேண்டும். அது கடினம் என்றே தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்