நீண்ட கால முதலீடே பலனை தரும்

By வாசு கார்த்தி

முன்பை விட பெண்கள் அதிகம் படித்திருந்தாலும் வேலை செய்யும் பங்களிப்பு குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மியூச்சுவல் பண்ட்களை பொறுத்தவரை ஒட்டுமொத்த பண்ட் மேனேஜர்களின் எண்ணிக்கையில் 7 சதவீத அளவுக்கு மட்டுமே பெண்கள் இருக்கின்றனர். மொத்தம் இருக்கும் 269 பண்ட் மேனேஜர்களில் 18 பேர்கள் மட்டுமே பெண்கள். இதில் கவனிக்கத்தக்கவர் பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரோஷி ஜெயின்.

சிஏ முடித்துள்ளார். சிஏ தேர்வில் அனைத்திந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகம் பயின்றவர். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் அனலிஸ்டாக இருந்தவர். 2005-ம் ஆண்டு பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் இணைந்தார். பிராங்ளின் இந்தியா புளூசிப் பண்ட் மற்றும் பிராங்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனிஸ் பண்ட் ஆகிய இரு பண்ட்களை நிர்வகிக்கிறார்.

அவருடனான உரையாடலில் இருந்து...

ஆண்கள் அதிகம் இருக்கும் இந்தத் துறைக்கு விரும்பி வந்தீர்களா?

ஆமாம். எனக்கு பிடித்ததால்தான் இந்தத் துறைக்கு வந்தேன். தவிர இந்தியாவில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கு பெண்களின் பங்கு மிகவும் குறைவு. பணி இடத்தில் மட்டுமல்லாமல் ஐஐஎம்களில் கூட பெண்களின் பங்கு குறைவுதான். அதனால் இது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு, சிறு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து பெரும் தொகையை இழந்தார்கள். அதனைத் தொடர்ந்து மியூச்சுவல் பண்ட்களில் எஸ்ஐபி முறையில் அதிக முதலீடு வருகிறது. ஆனால் இந்த அனைத்து முதலீடுகளும் அதிகபட்சம் 200 பங்குகளுக்குள் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. இது ரிஸ்க் இல்லையா? இந்த ஏற்றம் நிலைக்குமா?

சில பங்குகளுக்கு மட்டும் அதிக அளவிலான முதலீடுகள் தொடர்ந்து செல்லலாம் என்பதால் உங்கள் வாதத்தை பொதுமைப்படுத்த முடியாது. இந்தியாவின் வளர்ச்சி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சில பங்குகளின் மதிப்பு அதிகமாக இருக்கலாம். ஆனால் இன்னமும் அந்த பங்குகள் வளர்ச்சி அடைவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. தவிர லார்ஜ் கேப் பங்குகள் பல சுழற்சிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இன்னும் அந்த பங்குகளில் வாய்ப்புகள் இருக்கும்போது ஏன் முதலீடு செய்யக்கூடாது. உதாரணத்துக்கு நிதிச்சேவை பிரிவில் இருக்கும் பங்குகள் அதிகமாக உயர்ந்துள்ளன. ஆனால் இந்தியாவில் நிதிச்சேவை துறை வளர்வதற்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கிறதே! தவிர ஒவ்வொரு சமயத்திலும் முதலீடு செய்வதற்கு என புதிய புதிய வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிறந்த பண்ட் மேனேஜருக்காக இரு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து விருதுகளை சமீபத்தில் பெற்றிருக்கிறீர்கள்? உங்களுடைய எந்த தேர்வு சரியாக இருந்தது?

இது ஒரு குழு முயற்சி. நான் வழி நடத்துகிறேன். தவிர எங்களுடைய நிறுவனத்துக்கென கொள்கைகள் இருக்கின்றன. அந்த கொள்கைகளை அடிப்படையாக வைத்துதான் பங்குகளை தேர்வு செய்தோம். நான் மட்டுமே அனைத்து முடிவையும் எடுக்கவில்லை. எங்கள் நிறுவனத்தின் முதலீட்டு கொள்கைக்கு கிடைத்த விருதாகவே இதனை பார்க்கிறேன்.

உங்களுடைய மிகச் சிறந்த பங்கு தேர்வு எது?

ஒரு பங்கு அதிக லாபம் கொடுப்பது நல்லதல்ல. ஒரு போர்ட்போலியோ மொத்தமாக லாபம் அடையவேண்டும் என்பதுதான் முக்கியம். ஒரு போர்ட்போலியோவில் ஒரு பங்கு அதிகபட்சம் 5 சதவீதம் இருக்கும். ஒருவேளை அந்த பங்கு இரு மடங்காக உயர்ந்தால் கூட போர்ட்போலியோவில் பெரிய மாற்றம் இருக்காது. அனைத்து பங்குகளும் சிறப்பாக செயல்பட வேண்டும். தவிர ஒரு பங்கில் மட்டும் கவனம் செலுத்து மிகவும் ரிஸ்கானது. ஒட்டுமொத்தமாக போர்ட்போலியோ லாபமீட்ட வேண்டும்.

எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் மட்டும் போதும் என்கிற ஆலோசனைகளைக் கேட்க முடிகிறது. முதலீடு செய்தால் மட்டும் போதுமா, போர்ட்போலியோவை திரும்பி பார்க்க தேவையில்லையா?

இரு விஷயங்கள் முக்கியம். முதலில் எந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறீர்கள் என்பது முக்கியம். பண்ட் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய ரிஸ்க் மற்றும் வருமான எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் அந்த பண்ட் இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகே முதலீட்டை தொடர வேண்டும். முதலீடு செய்தாலும், பண்ட் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டியது முக்கியம். அதற்காக தினசரி என்ஏவியை பார்க்கத் தேவை யில்லை, வருடத்துக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்து ஆராயலாம்.

மியூச்சுவல் பண்ட் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிப்பதற்கு செபி ஒப்புக்கொண்டுள்ளது. உங்களது கருத்து என்ன?

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் மிக மிக குறைவு. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதால் பிரபலங்கள் நடிக்கலாம். அதே சமயம் இது எப்எம்சிஜி துறை அல்ல. நிதி சார்ந்தவை என்பதால் முதலீடு செய்யும்போது அந்த திட்டத்தின் சாதக பாதகங்கள் முதலீட்டாளர்களுக்கு தெரிந்திருக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டியதும் அவசியம்.

சந்தை இப்போது வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்து எதை நோக்கி சந்தை செல்லும்? சரிவு ஏற்படுமா?

சந்தை நேர்கோட்டில் பயணிக்காது. ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் குறுகிய கால கணிப்புகளை நாங்கள் கூறக் கூடாது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் சந்தை இன்னும் மேலே உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உங்களுடைய தனிப்பட்ட முதலீடு எங்கு இருக்கிறது?

எங்களுடைய பங்குச்சந்தை மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில்தான் பெரும்பாலான சேமிப்பு இருக்கிறது.

தற்போது எந்த துறை முதலீட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது?

நிதிச்சேவைகள், கட்டுமானம், நுகர்வோர் துறைகள் பங்குகளில் வாய்ப்புகள் இருக்கின்றன.

முதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பங்கு சார்ந்த முதலீடுகள் என்பது முதலீட்டுக்கு ஏற்றவை என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண் டும். தவிர குறுகிய காலத்துக்கு முதலீடு செய்யாமல் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் மட்டுமே முதலீடு செய்ததன் பலனை அனுபவிக்க முடியும்.

karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்