நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் அரசின் மறைமுக வரி வருமானம் 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி ஆகியன மறைமுக வரிப்பிரிவின்கீழ் வருகின்றன. இவற்றின் மூலமான வருமானம் ரூ. 3,55,003 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் வரி வருவாய் ரூ. 3,34,309 கோடியாக இருந்தது.
உற்பத்தி வருவாய் 4.5 சதவீதம் சரிந்து ரூ. 1,18,405 கோடியாகவும், சுங்க வரி 6.7 சதவீதம் அதிகரித்து ரூ. 1,26,285 கோடியாகவும், சேவை வரி 20 சதவீதம் அதிகரித்து ரூ. 1,10,313 கோடியாகவும் இருந்தது. டிசம்பர் மாதத்தில் வரி வருவாய் 16.6 சதவீதம் அதிகரித்து ரூ. 48,004 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 41,166 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் மறைமுக வரி வருவாய் ரூ. 5.65 லட்சம் கோடியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு வசூலான தொகை ரூ. 4.73 லட்சம் கோடியாகும். -பி.டி.ஐ.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago