சிடிடி: திரும்பப் பெறும் திட்டம் இல்லை

By செய்திப்பிரிவு

முன் பேர வர்த்தகச் சந்தையில் பொருள்கள் பரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் வரியை (சிடிடி) திரும்பப் பெறும் யோசனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 5 தேசிய மற்றும் 12 பிராந்திய பொருள் பரிவர்த்தனை மையங்கள் செயல்படுகின்றன.

முன்பேர வர்த்தக சந்தையில் வேளாண் பொருள்கள் அல்லாத சில பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கு 0.01 சதவீதம் பரிவர்த்தனை வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்டது. இத்தகைய வரி விதிக்கப் பட்டதால் நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி 15-ம் தேதி வரை வர்த்தகம் 37 சதவீதம் வரை சரிந்தது. இதுவரை ரூ. 85.24 லட்சம் கோடி அளவுக்கு பொருள்கள் பரிவர்த்தனையாகியுள்ளன.

பொருள்கள் விற்பனை குறைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. இதனால் வரி விதிக்கப்பட்டதால் விற்பனை குறைந்ததாகக் கூறமுடியாது என்று பார்வேர்ட் மார்கெட்டிங் கமிஷன் (எப்எம்சி) தலைவர் ரமேஷ் அபிஷேக் கூறினார். இருப் பினும் செயல்பாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சில சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்