பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் குறிப்பாக, நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளம் உள்ளிட்டவற்றை சீரமைக்க செபி தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான வரைவு அறிக்கை தயாராகி வருவதாக பங்கு பரிவர்த்தனை வாரிய (செபி) தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார்.
இப்புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நடைமுறைக்குள் வரும் என்பது உறுதி. இது தொடர்பான வரைவு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இவற்றை இணைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவன சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
புதிய நிறுவனச் சட்டம் முந்தைய சட்டத்தைவிட தெளிவானதாகவும், நிறுவனங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதை உள்ளடக்கியதாகவும் உள்ளதாக சின்ஹா கூறினார்.
நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பாக பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகள் தொடர்பான விவர அறிக்கை கடந்த ஜனவரி மாதமே இணையதளத்தில் வெளியிடப்பட்டு குறைந்தபட்ச பங்கு வைத்துள்ளவர்கள் மற்றும் தன்னிச்சையான இயக்குநர்கள் ஆகியோர் நியாயமற்ற வகையில் வழங்கப்படும் சம்பளம் குறித்து கண்காணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த கருத்து கேட்பில் புதிய உத்தியின் அடிப்படையில் நிர்வாக செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய சுயேச்சையான நிறுவனங்கள் நியமிக்கப்பட வேண்டும். இது தவிர கூடுதலாக குறிப்பிட்ட இடைவெளியில் செபி அமைப்பானது பங்குச் சந்தையையும், பட்டியலி டப்பட்டுள்ள நிறுவன செயல்பாடு களையும் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற விவரத்தை அளிக்க சின்ஹா மறுத்துவிட்டார். கடந்த ஓராண்டாக நிறுவன செயல்பாடுகளை சீரமைக்க வேண்டும என்பதில் செபி தீவிரமாக உள்ளது. மேலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது.
54 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வு அறிக்கையில் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளின் சம்பளம் குறித்தும், அவர்களின் செயல்பாடு, நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள இலக்கு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது தவிர, பிற இயக்குநர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றுக்கும் வழி வகை செய்யும் வகையில் புதிய நிறுவன சட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சின்ஹா கூறினார்.
சில நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளின் சம்பளம் வெளிநாட்டில் இதே பதவியில் இருப்பவர்களை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதை நியாயப்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
புதிய நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் சர்வதேச தரத்தில் இந்திய பங்குச் சந்தை செயல்படுவதை உறுதிப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்களின் செயல்பாடு களைக் கண்காணிப்பது, முதலீட்டாளர் நலன் காப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் செபி ஈடுபட்டுள்ளது தெரிய வரும் என்று சின்ஹா கூறினார்.
செபி வகுத்துள்ள நெறிமுறைகள், வழிகாட்டு நெறிகள் அனைத்தையும் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சின்ஹா கூறினார். உயர் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கு முன்பாக, பிரச்சினைகளை செபி கவனத்துக்குக் கொண்டு வந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பதோடு உரிய தீர்வும் காணப்படும் என்று அவர் மேலும் கூறினார். இதற்கு முன்பு பண பரிவர்த்தனையில் சாதாரண முதலீட்டாளர் நலன் பலி கொடுக்கப்பட்டு அதற்கு சமாதா னமும் கூறப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சின்ஹா தெரிவித்தார். -பி.டி.ஐ.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago