நிப்பான் பெயின்ட் இந்தியா நிறுவனத்தின் துறை வேகமாக வளர்ச்சியடைந்தாலும், ஒருவருடைய வாழ்க்கையில் அதிகபட்சம் மூன்று முறைக்கு மேல் பெயின்ட் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அந்த துறையை பற்றி அதிகம் நாம் தெரிந்துகொள்வதில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. இந்த துறை எப்படி செயல்படுகிறது, சிக்கல் என்ன என்று தெரிந்துகொள்வதற்காக பெயின்ட் (டெகரேட்டிவ் பிரிவு) தலைவர் மகேஷ் ஆனந்தை சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து..
திருச்சியில் பிகாம் முடித்தவர் மகேஷ் ஆனந்த். அதன் பிறகு டைப்ரைட்டிங் நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தார். இந்தியாவில் கம்ப்யூட்டர்கள் வளர தொடங்கியிருந்த காலம் என்பதால் டைப்ரைட்டிங் துறையில் வளர்ச்சி இருக்காது என்பதை உணர்ந்து பெர்ஜர் பெயின்ட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அங்கு இருக்கும் போதே எம்பிஏ படித்தார். அங்கு 16 வருடங்கள் பணிபுரிந்தார். அதன் பிறகு நிப்பான் பெயின்ட் இந்தியாவில் தொடங்கும் சமயத்தில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தவர்.
பெயின்ட் நிறுவனங்களின் பிஸினஸ் மாடல் என்ன?
முன்பெல்லாம் நிறுவனங்கள் ஒவ்வொரு கலரிலும் பெயின்ட் தயாரிப்பார்கள். அதனை விநியோகம் செய்வோம். இப்போது வெள்ளை மற்றும் நிறமில்லாத பெயின்ட் தயாரித்து கடைகளில் உள்ள டின்ட் மெஷினில் கொடுத்தால் தேவையான வண்ணங்களை பெறலாம்.
வீட்டு உபயோகம், ஆட்டோ மொபைல், இண்டஸ்ட்ரி என மூன்று வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகை. வீட்டு உபயோக (டெகரேட்டிவ்) பிரிவை நான் பார்த்துக்கொள்கிறேன்.
வழக்கமான எப்எம்சிஜி நிறுவனங்கள் போல, நிறுவனங்களில் இருந்து டிஸ்ரிபியூட்டர் அதன் பிறகு ஏஜென்ட் அதனை தொடர்ந்து கடைகளுக்கும் பிறகு வாடிக்கையாளர்களுக்கும் செல் லும் நடைமுறை இங்கு கிடையாது. டெகரேட்டிவ் பிரிவில் நேரடி யாக தொழிற்சாலையில் இருந்து எங்க ளுடைய கிடங்குக்கு செல்லும். அங்கி ருந்து நேரடியாக கடைகளுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு செல்லும்.
ஏன் டீலர் மாடலை எந்த நிறுவனங்களும் பின்பற்றவில்லை? விநியோகஸ்தர் இருந்தால் நீங்களே நேரடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டாமே?
விநியோகஸ்தர் இருக்கும் பட்சத் தில் அவர்கள் கடைகளுக்கு கொண்டு சென்று விற்று பணம் வாங்குவார்கள். ஆனால் பெயின்டை விற்பதற்கு இந்த துறையைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கை யாளர்களை சந்திக்க வேண்டும், பெயின் டர்களை சந்திக்க வேண்டி இருக்கும், வண்ணங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் நாங்களே விற்பனை பிரதிநிதிகளை நியமனம் செய்கிறோம்.
பெயின்ட் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பெயின்ட் நிறுவனங்களின் பெயின்டும் ஒன்றுதான். நிப்பான் பெயரை எப்படி வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்கிறீர்கள்?
முதலில் சர்வதேச தரத்தில் பெயின்ட் தயாரிக்க முடிவு செய்தோம். அடுத்து தேவை அடிப்படையில் பெயின்ட்களை தயாரிக்க ஆரம்பித்தோம். உதாரணத் துக்கு இந்த பெயின்ட் அடித்தால் பாக்டீரியா வராது, பெயின்ட் வாசம் இருக்காது என்று பயன்பாட்டு அடிப் படையில் கொண்டு வந்தோம். முன்பெல் லாம் ஹார்டுவேர் கடைகளில் பெயின்ட் விற்றுவந்தார்கள். பெயின்ட்களுக்காக பிரத்யேக ஸ்டோர் கொண்டு வந்தோம். அதன் பிறகு சுற்றுச்சூழலுக்கு உகந்த பெயின்ட்களை தயாரித்தோம்.
அதேபோல விநியோகத்தையும் விரிவு படுத்தினோம். பெயின்ட் வாங்கு வதற்காக யாரும் அதிக தொலைவுக்கு செல்ல மாட்டார்கள். அருகே கிடைக்கும் கடையில் வாங்கிவிடுவார்கள். அதனால் எங்களது நெட்வொர்க்கை அதிகப்படுத்தினோம். அதன் பிறகு விளம்பரத்துக்காக செலவு செய்தோம். விளம்பரத்துக்கென மொத்தமாக செலவு செய்யாமல் எங்கு விளம்பரம் செய்தால் பயனுள்ளதாக இருக்குமோ அங்கு மட்டுமே விளம்பரம் செய்கிறோம். குறிப்பாக தேசிய அளவில் உள்ள செய்தி சேனல்களில் அதிக கவனம் செலுத்துகிறோம்.
தவிர பெயின்டர்களுடன் அடிக்கடி உரையாடுகிறோம். பெயின்ட் அடிப்ப தற்கு முறையான பயிற்சியை அளிக்கி றோம். அவர்களுக்கு எங்களது பிராண்ட் நினைவில் இருந்தால், எளிதாக வாடிக்கையாளர்களை நோக்கி செல்ல முடியும்.
பெயின்ட் விற்பனைக்கு என்று ஏதாவது காலம் இருக்கிறதா?
முன்பெல்லாம் பொங்கல் சமயத்தில் அதிகம் விற்பனையாகும். குறிப்பாக 50 மில்லி கேன் அதிகளவில் விற்பனை ஆகும். ஆனால் இப்போது அப்படி ஏதும் இல்லை. அதேபோல விநாயகர் சதுர்த்தியிலிருந்து தொடங்கும் விழாகாலங்களில் விற்பனை நன்றாக இருக்கும். பொதுவாக அதிக வெயிலும் இல்லாத, அதிக மழையும் இல்லாத காலம் பெயின்ட் நிறுவனங்களுக்கு விற்பனை காலம் ஆகும். இப்போது தென் மேற்கு மழை தொடங்கிவிட்டதால் கேரளாவில் விற்பனை பெரிய அளவில் இருக்காது.
ரியல் எஸ்டேட் மந்த நிலையால் பெயின்ட் விற்பனை பாதித்திருக்கிறதா?
பெயின்ட் விற்பனையை இரண்டாக பிரிக்கலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் பெயின்ட் அடிப்பது மற்றும் ஏற்கெனவே கட்டிய வீட்டுக்கு அடிப்பது. எங்களது விற்பனையில் 60 சதவீதம் ஏற்கெனவே இருக்கும் வீடுகளுக்கு பெயின்ட் அடிப்பதில்தான் உள்ளது. புதிய வீடுகளுக்கான விற்பனை 40 சதவீதம்தான். இந்த பிரிவு விற்பனை கொஞ்சம் குறைந்திருக்கிறது.
ஏற்கெனவே இருக்கும் வீடுகளுக்குத்தான் 60 சதவீதம் விற்பனை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒருவர் வாழ்நாளில் வீட்டுக்கு மூன்று முறை பெயின்ட் அடித்தாலே அதிகம் தானே?
சரிதான். இந்த எண்ணிக்கையை குறைப்பதுதான் எங்களை போன்ற நிறுவனங்களுக்கு சவால். இந்தியாவில் தனிமனித பெயின்ட் நுகர்வு 3கிலோ தான். ஆனால் லங்காவில் 8 கிலோ வாக இருக்கிறது. இதை அதிகப்படுத்து வதற்கு பெயின்ட் அடிக்கும் காலத்தை குறைக்கவேண்டும். பணம் இல்லை என்பதால் பெயின்ட் அடிக்காமல் இருக்கிறார்கள் என்பதை விட, பெயின்ட் அடிப்பதில் உள்ள சிக்கல்களால்தான் அடிக்காமல் தள்ளிப்போடுகிறார்கள். அந்த சிக்கலை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
பொதுவாக இந்தியர்கள் வண்ணங் களில் ஈடுபாடு உள்ளவர்கள். ஆனால் நீங்கள் ஜப்பான் சென்றால் வெள்ளை அல்லது கருப்பு நிறங்களில்தான் ஆடை கள் இருக்கும். பெயின்ட் அடிப்பதில் உள்ள சிக்கலை போக்கும் பட்சத்தில் 10 வருடங்களில் அடிப்பவர்கள் ஐந்து வருடங்களில் அடிப்பார்கள்.
இப்போது நாங்களே உங்கள் வீடுகளுக்கு வந்து இரண்டு நாட்களில் பெயின்ட் அடித்து கொடுக்கிறோம் என்று சொல்லும்பட்சத்தில் இந்த பிரச்சினையை களைய முடியும்.
உங்களுடைய சந்தை மதிப்பு எவ்வளவு?
இரண்டு சதவீதம் அளவுக்குத்தான் உள்ளது. தென் இந்தியாவில் 5 சதவீதம் அளவுக்கு உள்ளது. நெருக்கடியான போட்டியில் 2 சதவீதம் போதாது என்றா லும் இது முக்கியமான வளர்ச்சிதான்.
தொடர்புக்கு: karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago