ஃபேஸ்புக் மூலம் பண பரிவர்த்தனை: கோடக் மஹிந்திரா வங்கி அறிமுகம்

By பிடிஐ

தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.

இதன்மூலம் ஃபேஸ்புக்கில் உள்ள நண்பர்கள், உறவினர் களுக்கு பண பரிவர்த்தனை செய்ய முடியும். இத்தகைய பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் இன்றி இலவ சமாக அளிப்பதாக வங்கி அறிவித்துள்ளது. பணம் அனுப்புபவர் மற்றும் பணத்தை பெறுபவர் வங்கியின் வாடிக்கையாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதற்காக வங்கி ஐஎம்பிஎஸ் தளத்தை பயன்படுத்தி நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) மூலம் பணம் அளிக்கப்படும் என்று வங்கியின் துணைத் தலைவர் தீபக் சர்மா தெரிவித்தார். இப்போது மொபைல் போன் மூலமாக ஐஎம்பிஎஸ் தளத்தை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த ஐஎம்பிஎஸ் தளத்தில் 28 வங்கிகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி கோடக் மஹிந்திரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இப்புதிய சேவையின் மூலம் பணப் பரிவர்த்தனையை அளிக்க முடியும் என்று சர்மா தெரிவித்தார். பணம் அனுப்புவதற்கும், பணத்தைப் பெறுவதற்கும் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

ரிசர்வ் வங்கி மற்றும் நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றோடு இணைந்து கோடக் மஹிந்திரா வங்கி இந்த சேவையை அளிக்கிறது. இதன்படி பணத்தை அனுப்பு பவர் கேஏஒய் பிஏஒய் எனப்படும் பிரத்யேக இணையதளத்துக்குச் சென்று அங்கு வங்கி கணக்கு தொடர்பான விவரம், வங்கியின் எம்எம்ஐடி உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். இதில் ஒரு முறை பதிவு செய்துவிட்டால் போதும். பணத்தைப் பெறுபவர் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பண பரிவர்த்தனை நிறைவடைந்ததற்கான படிவத்தை பூர்த்தி செய்தால் போதுமானது.

பயனாளியும் கேஏஒய்பிஏஒய்-யில் பதிவு செய்திருந்தால் பண பரிவர்த்தனை விரைவாக நடைபெறும். ஃபேஸ்புக் சமூக தளம் மிகவும் பாதுகாப் பானதாக இருக்கும் பட்சத்தில் பண பரிவர்த்தனையும் பாதுகாப் பானதுதான். இருப்பினும் இரண்டு முக்கிய அம்சங்கள் உரிய நபரை உறுதி செய்து கொள்ள மேற்கொள்ளப்படும். மேலும் பண பரிவர்த்தனை கால அளவு மிகக் குறைவானது.

ஒரு முறை ரூ. 2,500 வரை பரிவர்த்தனை செய்ய முடியும். ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பரிமாற்றம் செய்யலாம். குறைந்த அளவிலான பண பரிவர்த்தனை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ள வசதியாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சர்மா கூறினார்.

இப்போது ஐசிஐசிஐ வங்கி மட்டும் தனது வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக் மூலமான பரிவர்த்தனையை அனுமதிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்