இந்திய செல்வந்தர் பட்டியலில் 6-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

By செய்திப்பிரிவு





ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான அவரது சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு அடுத்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டல் (16 பில்லியன் டாலர்) தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறார்.

ஐ.டி. துறையில் வல்லைமை பொருந்திய அஸீம் பிரேம்ஜியை (13.8 பில்லியன் டாலர்) நான்காவது இடத்துக்குத் தள்ளிவிட்டு, மூன்றாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார், சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சங்வீ. இவரது சொத்து மதிப்பு 13.9 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்ப்ஸ் வணிக இதழ், இந்தியாவின் பொருளாதார நிதி நெருக்கடி மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால், செல்வந்தர்களின் சொத்துகளின் உயர்வில் மந்தநிலைக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 11 இடங்கள் பின்னடவைக் கண்டுள்ள கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா, 750 மில்லியன் டாலர் சொத்துகளுடன் 84-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்