இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6% ஆக உயரும்: இந்தியா ரேட்டிங்க்ஸ் மற்றும் ஆய்வு நிறுவனம்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 5.6 சதவீத அளவை எட்டும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் நிதி ஆண்டில் வளர்ச்சி அதிகரிக்கும் என கணித்துள்ளது நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் இருந்த பொருளாதார நிலையை விட 2014-ம் ஆண்டில் முன்னேற்றம் இருக்கும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டில் பொரு ளாதார வளர்ச்சியில் தொழில் துறையின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று தெரிவித்த இந்நிறுவனம், இந்த ஆண்டு 4.1 சதவீத வளர்ச்சியை எட்டும் என கணித்துள்ளது.

இது மத்திய, மாநில அரசுகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். ஆயத்த ஆடை ஏற்றுமதி 8 சதவீதம் முதல் 10 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று இந்நிறுவனம் கணித்துள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பதால் ஏற்றுமதி – இறக்குமதி இடையிலான பற்றாக்குறை ஓரளவு குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமான நிதி பற்றாக்குறை ஜி.டி.பி.-யில் 2.3 சதவீதம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2013-14-ம் நிதி ஆண்டில் அரசின் கடன் சுமை ஜிடிபி-யில் 21.7 சதவீதமாக இருக்கும். முந்தைய ஆண்டு இது 21.5 சதவீதமாகும். அரசின் நிதி நிலை ஸ்திரமாக இருக்கும் என்று கணித்துள்ளது இந்நிறுவனம். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்