காலாண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு: இன்ஃபோசிஸ் திட்டம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு அளிக்கத் திட்டமிட்டுள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

ஊழியர்களிடையே உள்ள திறமைகளை வெளிக் கொணரவும், நிறுவனத் திலிருந்து முக்கிய பதவி வகித்தவர்கள் வெளியேறியதால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை வெளி உலகுக்குக் காட்டவும் இத்தகைய முடிவை இன்ஃபோசிஸ் எடுத்துள்ளது.

காலாண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு அளிக்கப்படும் என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் வரை 12,500 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத் திலிருந்து ஊழியர்கள் வெளி யேறும் அளவு கடந்த ஆண்டு 16.3 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டு இது 14.7 சதவீதமாகும்.

ஊழியர்கள் வெளியேறுவதைக் குறைக்கவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாகக் கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஆண்டுதோறும் ஏப்ரலில் அளிக்கப்படும் என்று கடந்த மாதம் அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE