ஜி.எஸ்.கே. பார்மா நிகரலாபம் 42% சரிவு
ஜி.எஸ்.கே. பார்மாவின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டு நிகரலாபம் 42 சதவீதம் சரிந்திருக்கிறது.
கடந்த வருடம் இதேகாலத்தில் இந்த பார்மா நிறுவனம் 169.01 கோடி ரூபாய் நிகரலாபமாக ஈட்டியது. இப்போது 42 சதவீதம் சரிந்து 96.54 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிறுவனத்தின் மொத்த வருமானமும் 8 சதவீதம் சரிந்திருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் மொத்த வருமானம் 713 கோடி ரூபாயாக இருந்தது, இப்போது சரிந்து 654 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிறுவனத்தின் இதர வருமானமும் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருட மார்ச் காலாண்டில் 77 கோடி ரூபாயாக இருந்த இதர வருமானம் இப்போது 45 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.
மைண்ட் ட்ரீ லாபம் 24.5% உயர்வு
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட் ட்ரீயின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 24.50 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த வருடம் இதே காலாண்டில் (ஜனவரி - மார்ச் 2013) 78.9 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறது. இப்போது 24.50 சதவீதம் உயர்ந்து 98.2 கோடி ரூபாயாக இருக்கிறது.
நடந்து முடிந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 11 சதவீத அளவில் நிகரலாபம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
மொத்த வருமானமும் 34.50 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
2013-ம் ஆண்டு மார்ச் காலாண்டில் 612.40 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம், இப்போது 823.70 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
ஹெச்.சி.எல். நிகரலாபம் 59% உயர்வு
ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 59 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நொய்டாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த வருட மார்ச் காலாண்டில் 1,021 கோடி ரூபாயை நிகரலாபமாக ஈட்டியது. இப்போது 59 சதவீதம் உயர்ந்து 1,624 கோடி ரூபாயாக இருக்கிறது.
மொத்த வருமானம் 6,430 கோடி ரூபாயாக கடந்த வருடம் மார்ச் காலாண்டில் இருந்தது, இப்போது 29.8 சதவீதம் உயர்ந்து 8,349 கோடி ரூபாயாக இருக்கிறது.
தொடர்ந்து 10 காலாண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சி கணிசமாக இருந்து வருவதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனந்த் குப்தா தெரிவித்தார். நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 4 ரூபாய் அறிவித்திருக்கிறது.மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனத்தில் 90,190 பேர் பணிபுரிகிறார்கள்.
விப்ரோ நிகர லாபம் 28.8 % உயர்வு
இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 28.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருட இதே காலத்தில் ரூ.1,728.70 கோடியாக இருந்த நிகரலாபம் இப்போது 28.8 சதவீதம் அதிகரித்து ரூ.2,226.50 கோடியாக உயர்ந்திருக்கிறது.
நிகர விற்பனையும் 21.7 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருட இதேகாலாண்டில் ரூ.9,613.10 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது 11,703.60 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வரும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 171.5 -175.5 கோடி டாலர் வருமானத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறது. மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் 1,46,056 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.
விப்ரோ நிறுவனம் இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 5 ரூபாய் அறிவித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago