வேலையின்மையினை அளவிடுவதில் உள்ள சவால்கள் பற்றி பார்ப்போம். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), பத்தாண்டுக்கு ஒரு முறையும்,NSSO (National Sample Survey Organisation), ஐந்தாண்டுக்கு ஒருமுறையும்நாட்டிலுள்ள வேலை, வேலையின்மை பற்றிய துல்லியமான விரிவான புள்ளி விபரங்களை சேகரிக்கின்றனர்.
முதலில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை NSSO சேகரிக்கும் புள்ளி விபரங்களின் தன்மை பற்றி பார்ப்போம். இது ஒரு மாதிரி கணக்கெடுப்பு (sample survey). அதாவது நாட்டில் உள்ள குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகித குடும்பங்களில் இக்கணக்கெடுப்பு செய்யப்படும். உதாரணமாக நாட்டிலுள்ள மூன்று அல்லது நான்கு சதவிகித குடும்பங்களில் இக்கணக்கெடுப்பு செய்யப்படும். அதனைக்கொண்டு நாட்டில் நிலவும் ஒட்டுமொத்த வேலையின்மை எவ்வளவு என்று தீர்மானிக்கப்படும்.
கணக்கெடுக்கும் நாளிலிருந்து முந்தைய ஒரு வருடத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன வேலைகளை எவ்வளவு காலம் செய்தார்கள் என்பது இக்கணக்கெடுப்பின் அடிப்படைக் குறிக்கோள். வேலையின்மையின்வழக்கமான முக்கிய நிலை (Usual Principal Status of Unemployment-UPS):.ஒருவர் தன் திறமைக்கேற்ற வேலை ஏதும் கிடைக்காமல் கடந்த ஒரு வருடத்தில் வேலை இல்லாமல் இருந்தால் அதனை UPS வேலையின்மை என்று NSSO தரம் பிரிக்கிறது.
வேலையின்மையின் வழக்கமான முக்கிய மற்றும் துணை நிலை(Usual Principal and Subsidiary Status of Unemployment (UPSS)):ஒருவர் தன் திறமைக்கேற்ப வேலை கிடைக்கவில்லை என்றாலும், சாதாரண வேலை செய்யத் தயாராக இருந்தும், அவ்வாறான சாதாரண வேலையும் கடந்த ஒரு வருடத்தில் கிடைக்கவில்லை என்றால், அது UPSS வேலையின்மை என்று கூறப்படும். இதில் UPS வேலையின்மையும் சேர்ந்து இருக்கும். ஆகவே, UPS வேலையின்மை அளவைவிட UPSS வேலையின்மை அளவு அதிகமாக இருக்கும்.
நடப்பு வாராந்திர வேலையின்மையின் நிலை (Current Weekly Status of Unemployment-CWS):NSSOகணக்கெடுப்பின்போது, கடந்த ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் வேலையில் இருந்தார்களா என்ற நிலையைக் கூறுவதுCWS. இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் ஒரு மணி நேரம் கூட எந்த வேலையும் கிடைக்காதவர்கள் இந்தCWSவேலையின்மை கணக்கில் சேர்க்கப்படுவர்.
நடப்பு தினசரி வேலையின்மையின் நிலை (Current Daily Status of Unemployment): NSSOகணக்கெடுப்பின்போது, கடந்த ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் வேலையில் இருந்தார்களா என்ற நிலையை குறுவதுCDS. இவ்வாறு கடந்த ஒரு நாளில் ஒரு மணி நேரம் கூட எந்த வேலையும் கிடைக்காதவர்கள் இந்தCDSவேலையின்மை கணக்கில் சேர்க்கப்படுவர். இதில் UPS, UPSS என்பன நீண்டகால வேலையின்மையையும், CWS, CDS என்பன குறுகியக் கால வேலையின்மையையும் கணக்கிட்டு காட்டுகின்றன.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago