பால் ஸ்டீவன்ஸ் ஒடேலினி - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ அமெரிக்கத் தொழிலதிபர், இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. கூகுள் இயக்குநர் குழு உறுப்பினர்.

$ அமெரிக்காவில் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும், இவரது பெற்றோர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். இவரது சகோதரர் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக உள்ளார்.

$ சான் பிரான்ஸிஸ்கோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், பெர்க்ளியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

$ 1974-ம் ஆண்டில் இன்டெலில் பணிக்குச் சேர்ந்த இவர் 1998 முதல் 2002-ம் ஆண்டு வரை செயல் துணைத் தலைவராக பணியாற்றினார். பின்னர் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

$ இன்டெல் நிறுவனத்தின் மைக்ரோபிராசஸர் பிரிவு மற்றும் சிப் வர்த்தகத்தில் புதிய உத்திகளைப் புகுத்தியவர். டெஸ்க்டாப் விற்பனை அதிகரிப்புக்கு இவரது உத்தியே பிரதான காரணம்.

$ 2006-ம் ஆண்டில் இவர் தலைவராக இருந்தபோதுதான் இன்டெல் நிறுவனத்தில் மிக அதிக எண்ணிக்கையில் ஆள்குறைப்பு (10,600) செய்யப்பட்டது.

$ 2007-ம் ஆண்டில் சீனாவில் டாலியன் எனுமிடத்தில் 300 கோடி டாலர் மதிப்பில் செமி கண்டக்டர் தொழிற்சாலையை ஏற்படுத்தினார். 2013-ம் ஆண்டு மே மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

வணிகம்

40 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

7 days ago

மேலும்