ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவது அதிகரிக்கும்

By செய்திப்பிரிவு

2020-ம் ஆண்டு விற்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் நான்கில் மூன்று ஆன்லைன் மூலமாக விற்பனை ஆகும் என்று கூகுள் மற்றும் பாஸ்டன் கன்ஸல்டிங் குரூப் (பி.சி.ஜி.) நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இன்ஷூரன்ஸ் மட்டுமல்லாமல் இணையம் மூலம் விற்பனை யாகும் அளவு ரூ. 3 லட்சம் முதல் 4 லட்சம் கோடி வரை இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது. ஸமார்ட் போன் மற்றும் இணைய சேவை இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலும் அதிகமாக ஊடுருவி வருவதுதான் இதற்கு காரணம். ஏற்கெனவே மிகப்பெரியஅளவில் இருக்கும் ஆன்லைன் விற்பனை இன்னும் பிரம்மாண்டமாக விரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இணையம் மூலம் தொடர்பில் உள்ளதால், இணைய சந்தைக்கு எல்லைகளே இல்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் டிஜிட்டல் வழியை பயன்படுத்தும்போது அதிகம்பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிஜிட்டல் மூலம் பாலிசிகளை வாங்கும்போது லைஃப் இன்ஷூரன்ஸ் பிரிவில் 15 - 20 சதவீதம் வரையிலும், பொதுகாப்பீட்டு பாலிசிகளுக்கு 20-30 சதவீதமும் சேமிக்க முடியும். இதன் மூலம் நிறுவனங்கள் லாப பாதைக்கு திரும்ப முடியும் என்றும் பி.சி.ஜி.யின் அல்பேஷ் ஷா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்