பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் போயிங் நிறுவனத்தின் மேக்ஸ் 737 விமானங்களில் முதற்கட்டமாக 100 விமானங்களை வாங்க நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நேற்று புதுடெல்லியில் செய்தி யாளர்களிடம் பேசிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், இந்த ஒப்பந்தம் விமானங்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, விமான பராமரிப்பு செலவுகளை குறைப்பதுடன், விமான சேவையில் முன்னோக்கி செல்வதற்கும் பக்கபலமாக இருக்கும் என்றார்.
ஆசிய விமான சேவை துறை வளர்ச்சியடைந்து வருவதால் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்திய சந்தையில் அடுத்த பத்தாண்டு காலத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் முதல் முறை விமான பயணத்தை மேற்கொள்வார்கள் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் போயிங் நிறுவனத்திடமிருந்து 205 விமானங் களை வாங்க உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் கூறியுள்ளது. இதன் மதிப்பு 2200 கோடி டாலராகும். இதில் 2014 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 55 விமானங்களும் அடங்கும். தவிர தேவையைப் பொறுத்து கூடுதலாக 50 விமானங்கள் வாங்கவும் இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago