240 புள்ளிகள் சரிவு

பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை கடுமையான சரிவு காணப்பட்டது. மொத்தம் 240 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 21133.56 புள்ளிகளாகக் குறைந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த ரிசர்வ் வங்கி மேலும் கடனுக்கான வட்டித் தொகையை அதிகரிக்கக் கூடும் என்று முதலீட்டாளர்களிடையே தகவல் பரவியதால் பங்குகளை விற்கும் போக்கு அதிகமாகக் காணப்பட்டது. இதுவும் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகும். அமெரிக்கா மற்றும் சீனாவில் நிலவும் மிகவும் பலவீனமான பொருளாதார சூழல் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 78 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 6266.75 புள்ளிகளானது. ரியல் எஸ்டேட், கேபிடல் கூட்ஸ், நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கித் துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன. என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் லாபம் ஈட்டின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE