ஆட்டோ எக்ஸ்போ கோலாகல தொடக்கம்: 26 புதிய கார், மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம், ரூ. 15 லட்சத்துக்கு சுஸூகி பைக்

By செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஆட்டோமொபைல் விற்பனையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கண்காட்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் தங்களது விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

டெல்லி விமான நிலையத்திலேயே 12-வது ஆட்டோமொபைல் கண்காட்சிக்கான வினைல் போர்டுகள் பயணிகளை வரவேற்றன. இந்த முறை கண்காட்சிக்கு வருவோர் கட்டாயம் டிக்கெட் வைத்திருக்க வேண்டும். டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே முன் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த முறை பிரகதி மைதானத்தில் கண்காட்சி நடந்தபோது பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இம்முறை கண்காட்சி இரு கட்டமாக பிரித்து நடத்தப் படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு வைப்ப தற்கு கிரேட்டர் நொய்டாவையும், உதிரிபாக தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை வைக்க பிரகதி மைதானத்தையும் கண்காட்சி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு வாரம் நடைபெற உள்ளது இந்த கண்காட்சி.

சுஸுகி பைக் ரூ. 15 லட்சம்

சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ. 15 லட்சம் விலையில் புதிய மோட்டார் சைக்கிளை 12-வது ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானிய நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், வி ஸ்டாரம் என்ற மோட்டார் சைக்கிளையும் 110 சிசி திறன் கொண்ட லெட்ஸ் எனும் மோட்டார் சைக்கிளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஸ்கூட்டரை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. வி ஸ்டார்ம் மோட்டார் சைக்கிள் விலை ரூ. 14.95 லட்சமாகும். இனாஸுமா என்ற பிரபலமான மோட்டார் சைக்கிள் ரூ. 3 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

யமஹா ஸ்கூட்டர்

ஆண்டுக்கு 2 லட்சம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நோக்கில் புதிய ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,518 (தில்லி விற்பனையக விலை) ஆல்ஃபா என்ற பெயரிலான இந்த ஸ்கூட்டர் 113 சிசி திறன், 4 ஸ்டிரோக் இன்ஜினைக் கொண்டது. இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 62 கி.மீ. தூரம் ஓடக் கூடியது என நிறுவனம் தெரிவித்துள்ளது. மெஜந்தா உள்ளிட்ட 5 கண்கவர் வண்ணங்களில் இது வெளி வந்துள்ளது.

ஹீரோ மோட்டாரின் 2 புதிய பைக்

இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 100 சிசி திறன் கொண்ட ஸ்பிளெண்டர் புரோ கிளாசிக் மற்றும் பேஷன் டிஆர் ஆகிய இரு மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இது தவிர இந்நிறுவனம் 620 சிசி திறன் கொண்ட பிரீமியம் மோட்டார் சைக்கிளான ஹட்சர் மற்றும் கான்செப்ட் மாடலான சிம்ப்ளிசிட்டி மற்றும் ஐயோன் ஆகிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பியாஜியோவின் பிரீமியம் ஸ்கூட்டர்

இத்தாலிய நிறுவனமான பியாஜியோ புதிய மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப் படுத்தியுள்ளது. வெஸ்பா எஸ் எனும் மாடல் பிரீமியம் மாடலாகும். இந்நிறுவன வாகனங்கள் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உமிழ்பவை. ஒரு கிலோ மீட்டருக்கு 70 கிராம் மட்டுமே வெளியிடுவதாக நிறுவனம் தெரி வித்துள்ளது.

இந்நிறுவனத் தயாரிப்புகள் மகாராஷ்டிர மாநிலம் பாராமதியல் உள்ள ஆலையிலிருந்து வெளி வருகிறது.

நிசான்: 2 புதிய மாடல் கார்

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிசான் நிறுவனம் மேலும் இரண்டு டட்சன் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சந்தை விற்பனையில் 10 சதவீதத்தை எட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. டட்சன் என்ற பெயரிலான ஹாட்ச்பேக் மாடல் காரின் விலை ரூ. 4 லட்சமாகும். சென்னை ஆலையில் தயாராகும் இந்த கார்களுக்கான முன்பதிவு அடுத்த மாதம் தொடங்குகிறது.

மாருதியின் கான்செப்ட் கார்

அதிக கார்களை தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் செடான் சியாஸ் மற்றும் எஸ்எக்ஸ்4 எஸ் எனும் இரண்டு கான்செப்ட் மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர நிறுவனத்தின் 14 வெவ்வேறு மாடல் கார்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மாருதி நிறுவனம் இந்தியாவில் கார் தயாரிப்பில் ஈடுபட்டு 30 ஆண்டுகளாகிறது. இதுவரை இந்நிறுவனம் ஒரு கோடியே 20 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதமாகும்.

ஹூன்டாய்

கொரிய நிறுவனமான ஹூன்டாய் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் மாடல் காரான சான்டே ஃபேயை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 26.30 லட்சமாகும். 2.2 லிட்டர் என்ஜின் திறன் கொண்ட இந்த மாடல் கார் மூன்று வெவ்வேறு மாடல்களில் வெளிவந்துள்ளது. மாருதி நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் ஹூன்டாய் நிறுவனம் கார்களை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜின் குவாட்ரி சைக்கிள்

பஜாஜ் நிறுவனம் குவாட்ரி சைக்கிளுக் கான அனுமதிக்குக் காத்திருக்கிறது. மூன்று சக்கரங்களைக் கொண்ட இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கக் கூடியது. ஆர்இ60 என்ற இந்த குவாட்ரி சைக்கிள் 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட. இப்போது அரசின் அனுமதி கிடைத்த பிறகு செப்டம்பரில் வெளிவரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்