நிறுவனத் தலைவர்களுக்கு நிரந்தர பதவிக்காலம் தேவை

By செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு நிரந்தர பதவிக் காலம் கொடுக்கப்பட வேண்டும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் தலைவர் சுதிர் வாசுதேவா தெரிவித்திருக்கிறார்.

அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூன்றாவது பொதுத்துறை மாநாட்டில் இந்தக் கருத்தினை தெரிவித்தார் சுதிர் வாசுதேவா. இதுபோல குறிப்பிட்ட காலத்துக்கு உயர் அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் போது நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களால் திட்டங்களை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் தகுதி வாய்ந்த நபர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களாக சம்பளம் மற்றும் சலுகைகளில் சுதந்திரமாக முடிவெடுக்க பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

என்றாலும் இதற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வேண்டும் என்றார். நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஆட்களுக்கு உடனடியாக புதிய ஆட்களை நியமிப்பது அவசியம் என்றும், உயரதிகாரிகள் மற்றும் இயக்குநர் குழு காலியாக இருக்கும் போது அரசாங்கம் உடனடியாக அந்த வெற்றிடத்துக்கு ஆட்களை நியமிக்க வேண்டும், அப்போதுதான் முடிவெடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய ஜிடிபியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு 1970களில் 10 சதவிகித அளவுக்குதான் இருந்தது. ஆனால் 1990களில் 25 சதவிகித அளவுக்கு உயர்ந்தது. ஆனால் இப்போது இந்திய ஜிடிபியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு 22.1 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

59 வயதாகும் வாசுதேவா அடுத்த ஆண்டு பிப்ரவரில் தன்னுடைய இரண்டரை ஆண்டுகால தலைமை பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்