வாராக் கடன் வசூலில் முன்னேற்றம்: டாக்ரு

By செய்திப்பிரிவு

வாராக் கடன் வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக ரிசர்வ் வங்கியின் செயலர் ராஜிவ் டாக்ரு தெரிவித்தார். இதற்கு முக்கியக் காரணமே சில முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளதுதான் என்று அவர் கூறினார்.

கடந்த ஆறு மாத காலத்தில் மத்திய அமைச்சரவை குழு 60 முதல் 70 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டப் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் வாராக் கடன் வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக அவர் கூறினார். இந்த முன்னேற்றத்தின் பலன் அடுத்த நிதி ஆண்டில் நிச்சயம் தெரியும் என்று குறிப்பிட்டார்.

சில வங்கிகள் அளித்த வாராக் கடன் வசூலாகுமா அல்லது அது திரும்பக் கிடைக்காதா என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், சில வங்கிகளில் கடன் தொகை மெதுவாக திரும்புவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைச்சரவை குழு அமைக்கப்பட்டது. இக்குழு நின்று போன பெரும் திட்டப் பணிகளை ஆராய்ந்து அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும் பணியை மேற்கொண்டது.

ரிசர்வ் வங்கி கடந்த ஆறு மாதத்தில் வெளியிட்ட வங்கிகளின் வாராக் கடன் அளவு நடப்பாண்டு செப்டம்பர் 2014-ல் 4.6 சதவீத அளவுக்கு உயரும் என்று மதிப்பிட்டுள்ளது. இப்போது இது 4.2 சதவீதமாக உள்ளது. வாராக் கடன் அளவு ரூ. 229 லட்சம் கோடியாக உள்ளது. முன்னர் இது ரூ. 167 லட்சம் கோடியாக இருந்தது.–பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்