அந்நிய நேரடி முதலீடு 2.18 பில்லியன் டாலர்

By செய்திப்பிரிவு

ஜனவரி மாத அந்நிய நேரடி முதலீடு 1.5 சதவீதம் அதிகரித்து 2.18 பில்லியன் டாலராக இருக்கிறது என்று தொழில்துறை கொள்கை மேம்பாட்டுத் துறை (டி.ஐ.பி.பி.) தெரிவித்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலத்தில் 2.15 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்திருந்தது.

இருந்தாலும் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 2 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 19.1 பில்லியன் டாலர் முதலீடு வந்திருந்தது. ஆனால் இப்போது 18.74 டாலர் மட்டுமே வந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட 10 மாத காலத்தில் சேவை பிரிவில் 1.80 பில்லியன் டாலரும், பார்மா துறையில் 1.23 பில்லியன் டாலரும், ஆட்டோமொபைல் துறையில் 1 பில்லியன் டாலரும், கட்டுமான மேம்பாட்டு துறையில் 966 மில்லியன் டாலர் முதலீடும் வந்துள்ளன.

இந்த பத்து மாதத்தில் மொரீஷியஸ் வழியாக மட்டும் 4.11 பில்லியன் டாலரும், சிங்கப்பூர் வழியாக 3.67 பில்லியன் டாலரும், இங்கிலாந்தில் இருந்து 3.18 பில்லியன் டாலரும் நெதர்லாந்தில் இருந்து 1.7 பில்லியன் டாலர் முதலீடும் இந்தியாவுக்கு வந்துள்ளது.

ஒரு பில்லியன் = 100 கோடி, ஒரு மில்லியன் = 10 லட்சம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE