பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் ரூ.3000 கோடி திரட்ட இலக்கு

By செய்திப்பிரிவு

பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் 3000 கோடி ரூபாயை திரட்ட முடியும் என்று தெரிகிறது. இதற்கான பரிந்துரை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சர்வதேச அளவில் இ.டி.எஃப். (எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்) பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் இன்னும் பிரபல மடையவில்லை. ஈக்விட்டி இ.டி.எஃப். பிரபலமடையாத நிலை இருந்தாலும் கூட பொதுத்துறை இ.டி.எஃப்.-யை பிரபலமான புராடக்ட்டாக மாற்றுவதற்கு அரசு முயற்சி செய்யும் என்று பங்கு விற்பனைத் துறையின் இணைச் செயலாளர் அலோக் தாண்டன் தெரிவித்தார்.

இ.டி.எஃப். மூலம் பொதுத்துறை பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு இன்னொரு அரசாங்கத்துக்கு மற்றொரு வழி கிடைத்திருப்பதாக கோல்ட்மேன் சாக்ஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார். இ.டி.எஃப். மூலம் 3,000 கோடி ரூபாயை நடப்பு நிதி ஆண்டில் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் தாண்டன் தெரிவித்தார்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அரசாங்கம் தன்னு டைய இலக்கை அடைய முடியும் என்றும் கூறினார். இந்த இ.டி.எஃப்.-யை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் நிர்வாகம் செய்கிறது. இது இ.டி.எஃப். வடிவத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.

இதில் கோல் இந்தியா, கெயில், இந்தியன் ஆயில், பவர் பைனான்ஸ் கார்ப், ஆர்.இ.சி. உள்ளிட்ட பத்து பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் சிறுமுதலீட்டாளர் களுக்கு ஐந்த சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு 15 யூனிட்களுக்கும் ஒரு யூனிட் ஒதுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்