வர்த்தகப் பற்றாக்குறை குறைந்தது

By செய்திப்பிரிவு

நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஜனவரி மாதத்தில் 50 சதவீதம் குறைந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 992 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,897 கோடி டாலராக இருந்தது.

டிசம்பர் மாதத்தைவிட ஜனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. டிசம்பரில் அது 1,014 கோடி டாலராக இருந்தது.

செவ்வாய்க்கிழமை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் இந்தியாவின் ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து 2,675 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 2,578 கோடி டாலராக இருந்தது.

ஜனவரி மாதத்தில் இறக்குமதி 18 சதவீதம் குறைந்ததும் பற்றாக்குறை குறைவுக்கு முக்கியக் காரணமாகும். ஜனவரியில் இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு 3,657 கோடி டாலராகும். தங்கம் இறக்குமதியில் 77 சதவீதம் குறைந்தது இதற்கு முக்கியக் காரணமாகும்.

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 77 சதவீதம் சரிந்து 172 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இவை இரண்டின் இறக்குமதி 749 கோடி டாலராக இருந்ததாக வர்த்தகத்துறைச் செயலர் ராஜீவ் கெர் தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் கடந்த 10 மாதங்களில் தங்கம், வெள்ளி இறக்குமதி மதிப்பு 2,900 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4,670 கோடி டாலருக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது 37 சதவீத அளவுக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி குறைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2013-14) ஏற்றுமதி 25,708 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இது 24,319 கோடி டாலராக இருந்தது.

கடந்த 10 மாதங்களில் இறக்குமதி 37,704 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி 40,899 கோடி டாலராக இருந்தது. ஆண்டுக்காண்டு 7 சதவீத அளவுக்கு இறக்குமதி குறைந்து வந்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரை யிலான காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 11,995 கோடியாகும். முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 16,580 கோடி டாலராக இருந்தது.

ஜனவரி மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 1,318 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,455 கோடி டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 13,814 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி அளவு 13,649 கோடி டாலராக இருந்தது.

எண்ணெய் அல்லாத பிற பொருள்கள் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் 2,348 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தைவிட 22 சதவீதம் குறைந்தது. முந்தைய ஆண்டில் இது 3,008 கோடி டாலராக இருந்தது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் அல்லாத பிற பொருள்களின் இறக்குமதி மதிப்பு 23,890 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.3 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டில் இது 27,249 கோடி டாலராக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்