நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் அளவில் வங்கிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளில் அதிகக் கடனைப் பெற்றுவிட்ட நிறுவனங்கள், தொழிலில் நொடித்து போகும்போது, அதனால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் வங்கி பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு தனி நபர், நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்போது அதில் எல்லை மீறாமல் இருக்குமாறு வங்கிகளை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கிகளின் கடன் வழங்கும் அளவு ஸ்திரமாக இருக்கும் போதுதான் வங்கிகள் சிறப்பாகச் செயல்பட முடியும் என ஆர்பிஐ வெளியிட்ட ஆண்டு நிதி ஸ்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் வங்கிகளின் கடன் வழங்கு அளவு வரையறுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகள் சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வங்கிகள் அதன் கடன் வழங்கும் அளவில் குறிப்பிட்ட அளவுதான் கடன் வழங்க வேண்டும். வங்கியின் கடன் வழங்கும் அளவில் 50 சதவீதத்தை ஒரு நிறுவனத்துக்கு அளிக்கக் கூடாது. ஆனால் இப்போது கடன் வழங்கும் சராசரி சர்வதேச அளவில் 25 சதவீதமாகத்தான் உள்ளது. பெரிய வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் பல சந்தர்ப்பங்களில் இந்த விதிமுறைகளை மீறியுள்ளன.
சமீபத்தில் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு வரம்பு மீறி கடனை எஸ்பிஐ அளித்துள்ளது. இப்போது நிறுவனங்கள் திரும்பச் செலுத்தாத கடனால் வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் 60 சதவீத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கடன் பெறும் நிறுவனங்களின் திரும்ப செலுத்தும் திறனை ஆராய வேண்டும் என்றும் ஆர்பிஐ அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago