வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்குகிறது ஃபேஸ்புக்

By செய்திப்பிரிவு

முன்னணி சமூக வலைதள நிறுவ னமான ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க இருக்கிறது. வாட்ஸ் ஆஃப் என்பது அளவில்லாத குறுந்தகவல்கள், குரல் அழைப் புகளை பரிமாறிக் கொள்ளும் ஒரு அப்ளிகேஷன்.

இப்போதைக்கு 45 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு பத்து லட்சத்துக்கு மேலான வாடிக்கை யாளர்கள் வாட்ஸ் ஆஃப்-யை பயன்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் வாட்ஸ் ஆஃப் நிறுவனத்தில் 55 நபர்கள் மட்டுமே பணிபுகிறார்கள்.

டெக்னாலஜி துறையில் சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய டீல் இதுதான். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நோக்கியாவின் போன் பிஸினஸை 7.2 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்கைப் நிறுவனத்தை 8.2 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. கூகுள் நிறுவனம் மோட்டரோலா நிறுவனத்தை 12.5 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியதுதான் டெக்னாலஜி துறையில் சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய கையகப்படுத்துதல் ஆகும். இப்போது அதைவிடவும் அதிக தொகைக்கு வாட்ஸ் ஆஃப் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது பேஸ்புக்.

ஆப்பிள் நிறுவனம் ஒரு பில்லியன் டாலருக்கு மேலாக தொகை கொடுத்து எந்த நிறுவனத்தையும் வாங்கியதில்லை.2001-ம் டைம் வார்னர் நிறுவனம் ஏ.ஓ.எல். நிறுவனத்தை 124 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியதுதான் இதுவரையிலான பெரிய கையகபடுத்துதல் என இந்த துறை சம்பந்தப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஃபேஸ் புக் நிறுவனம் இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 700 மில்லியின் டாலர் கொடுத்து வாங்கியது. வேகமாக வளர்ந்துவரும் இந்த நிறுவனம், கூடியவிரைவில் ஒரு பில்லியன் பயனீட்டாளர்களை தொடும் என்று ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

வாட்ஸ் ஆப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் இந்த தொகை அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது என்று கார்ட்னர் நிறுவனத்தின் அனலிஸ்ட் பிரைன் பிளா தெரிவித்திருக்கிறார். நிறுவனங்கள் இணைந்தாலும் வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தொடர்ந்து தனியாக செயல்படும் என்றும், வாட்ஸ் ஆஃப்-ல் எந்தவிதமான மாற்றமும் செய்யப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ் ஆப் நிறுவன வரலாறு

2009-ம் ஆண்டு வாட்ஸ் ஆஃப் நிறுவனத்தை பிரைன் ஆக்‌டன் மற்றும் ஜான் காம் என்ற இரண்டு நண்பர்கள் ஆரம்பித்தனர். இவர்கள் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்கள். ஆரம்பத்தில் யாகூ நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள். பிரைன் ஆக்‌டன் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தில் விண்ணப்பித்து அங்கு வேலை கிடைக்காததால், தன்னுடைய நண்பருடன் ஆரம்பித் ததுதான் வாட்ஸ் ஆஃப்.

டிவிட்டர் நிறுவனத்தில் 25 கோடி வாடிக்கையாளர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அங்கு 2,300 நபர்கள் வேலை செய்கிறார்கள். பேஸ்புக் நிறுவனத்தில் வேலை கிடைக்காததால் வாட்ஸ் ஆஃப் ஆரம்பிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்