போலி நிதி நிறுவனங்கள்: `செபி’ புது உத்தி

போலி நிதி நிறுவனங்களைக் கண்காணிக்க பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) புதிய உத்தியைக் கடைப்பிடிக்க உள்ளது. இதன்படி மாநில ஒருங் கிணைப்புக் குழுக்களை மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூட்டி ஆய்வுசெய்ய முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் மக்களிடையே போலியான வாக்குறுதிகளை அளித்து நிதி திரட்டும் நிறுவனங்களை தடுத்து நிறுத்த முடியும் என்று செபி உறுதியாக நம்புகிறது.

ராஞ்சியில் செபி-யின் உள்ளூர் கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்த அதன் தலைவர் யு.கே. சின்ஹா, இனிவரும் காலங்க ளில் மாநில குழுக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்த முடிவு செய்துள் ளதாகக் கூறினார். செபி-யின் ராஞ்சி அலுவலகத்தை புதன்கிழமை மாநில தலைமைச் செயலர் ஆர்.எஸ். சர்மா திறந்து வைத்தார்.

இந்த அலுவலகம் இப்பிராந் திய மக்களிடையே நிதி தொடர் பான விழிப்புணர்வை ஏற்படுத்துவ தோடு, முதலீட்டாளர்களின் குறைகளைக் களையும்.

சராசரி மக்களும் பங்குச் சந்தை யில் முதலீடு செய்வது தொடர்பான பணிகளில் ஈடுபடச் செய்வதில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்காற்ற முடியும் என்று சின்ஹா கூறினார். மேலும் வங்கிளும், காப்பீட்டு நிறுவனங்களும் இதற்குத் தகுந்தாற்போன்ற பாலிசிகளை வகுத்து விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்றார்.

மிகவும் குறைந்த விலை யிலான பாலிசிகளை அறிமுகப் படுத்துவதன் மூலம் அது பெருமள விலான மக்களைச் சென்றடையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற 16 உள்ளூர் செபி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சின்ஹா கூறினார்.

ராஞ்சியில் உள்ள இந்த அலுவலகம் செபி முதலீட்டாளர் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE