அல்பிரேட் நோபலின் உயிலின்படி உருவாக்கப்பட்ட நோபல் பரிசுகளில் பொருளியல் நோபல் பரிசு இல்லை. ஆனால், ஸ்விடிஷ் ராயல் விஞ்ஞான அகாதெமியின் பரிந்துரை, தேர்ந்தெடுத்தல், பரிசு வழங்குதல் முறைகளை பொருளியல் பரிசுக்கும் கடைபிடிக்கப்பட்டு இந்த அகாதெமியால் வழங்கப்படுவதால் இதனையும் மற்ற நோபல் பரிசுக்கு இணையாக கருதுகின்றனர்.
1968 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் மத்திய வங்கி “ச்வெரிகஸ் ரிக்ஸ்பாங்க்” (Sveriges Riksbank) தனது 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதைக் கொண்டாடும் விதத்தில் பொருளியலுக்கான பரிசு வழங்கும்படி நோபல் கமிட்டியை கேட்டுகொண்டது.
இப்பரிசுக்காக தேர்ந்தெடுக்கும் செலவுகளையும் பரிசுத் தொகை யையும் வருடம்தோறும் நோபல் குழுவிற்கு இவ்வங்கி கொடுக் கின்றது. எனவே, பொருளியளுக் கான நோபல் பரிசை நோபல் நினைவாக ச்வெரிகஸ் ரிக்ஸ ்பாங்கின் பொருளாதார விஞ்ஞானத் திற்கான பரிசு என்று குறிப்பிடப்படும் (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel). மற்ற நோபல் பரிசுகள் எல்லாம் அந்தந்த துறைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப்படும்.
இந்த வருடம் பொருளியலுக்கான பரிசு தொகை சுமார் எட்டு மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனோர் ($1.2 மில்லியன்). நோபல் குழுவின் 5 தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உலகில் உள்ள நூற்றுகணக்கான பொருளியல் அறிஞர்களிடமிருந்து பெறபட்ட பரிந்துரைகளிருந்து ஒருவர் முதல் மூன்று நபர்கள் வரை இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். உயிருடன் இருப்பவருக்கு மட்டுமே இப்பரிசு வழங்கப்படுகிறது.
1968இல் ஜன் தின்பர்ஜன், ரகநர் ப்ரிஷ் என்ற இரு பொருளியல் அறிஞர்களுக்குபொருளியலுக்கான நோபல் பரிசு முதன்முதலாக வழங்கப்பட்டது.பொருளாதாரத்தின் இயங்குநிலை குறித்த ஆய்வுகளை இவர்கள் சிறப்பாக செய்ததால் இப்பரிசு வழங்கப்பட்டது. பொருளி யலில் பட்டம் பெறாதவர்களுக்கும் இப்பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. 1978-ல் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற ஹெர்பர்ட் A. சைமன் (Herbert A Simon) என்பவருக்கு பொருளாதார நிறுவனங்களில் முடிவெடுக்கும் முறை பற்றி செய்த ஆராய்ச்சிக்காக பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
'உளவியல் மற்றும் பொருளியலை இணைத்து மனிதர்கள் எவ்வாறு முடிவு எடுக்கின்றனர்' என்ற ஆராய்ச்சிக்கு 2002-ல் உளவியல் பட்டம் பெற்ற டேனியல் கண்நேமன் (Daniel Kahneman) என்பவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. எலினோர் ஆஸ்தரோம் (Elinor Ostrom) என்ற அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவருக்கு 'பொது பொருட்களின் மேலாண்மை ஆராய்ச்சிக்காக' ஒலிவர் E. வில்லியம்சன் என்பவருடன் இணைந்து, 2009-ம் வருடம் பொருளியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதுவரை பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் எலினோர் ஆஸ்தரோம் மட்டுமே பெண். 1998இல் நல பொருளியல் (Welfare Economics) ஆராய்ச்சிக்காக இந்திய நாட்டு குடிமகன் அமர்த்திய சென்னுக்கு பொருளியல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் யாருக்கு பொருளியல் நோபல் பரிசு என்ற ஊகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall Street Journal) பல பொருளியல் அறிஞர்களை நோபல் பரிசுக்காக பட்டியல் இட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் நிதியியல் பொருளியல் அறிஞர்கள். நோபல் பரிசின் முக்கிய சிறப்பு அம்சம் அதனின் ரகசியத் தன்மை. இதுவரை யாருமே முன்கூட்டியே நோபல் பரிசு பற்றிய தகவல்களை வெளி கொணர்ந்ததில்லை. ஆனால் பலர் இப்பரிசு கொடுத்தது பற்றி குறை கூறியுள்ளனர். சில நேரங்களில் தகுதிவாய்ந்த பலருக்கு கொடுக்கப் படாமலே போனது உண்டு.
பொருளியல் அறிஞர் ஜோன் ராபின்சொன்க்கு (Joan Robinson) நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பொருளியல் நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர். 1974 பிரெட்ரிச் ஹயேக் (Friedrich Hayek) என்பவர் பொருளியலுக்கான நோபல் பரிசை பெற்றுகொண்டு ஏற்புரை வழங்கும் போது 'பொருளியலுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமா என்று என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்று கூறிஇருப்பேன்.' நோபல் பரிசு ஒரு அறிஞருக்கு பெரிய ஆளுமையை கொடுக்கிறது. அவர் சொல்வதை சாமானிய மக்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என பலரும் ஏற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் செய்கின்றனர். இது பொருளியல் போன்ற சமூக அறிவியலுக்கு தேவையற்றது என்ற கருத்தையும் அவர் கூறினார். திங்கள்கிழமை பொருளாதாரத்துக்கான பரிசை அறிவிக்க இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago