அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 47% உயர்ந்து 416 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகரலாபம் 283 கோடி ரூபாயாக இருந்தது. விற்பனை அதிகரித்ததே இதற்கு காரணமாகும்.
ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர விற்பனை 5,723 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர விற்பனை 4,849 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் 92.2 லட்சம் டன் அளவுக்கு இருந்த சிமென்ட் விற்பனை இப்போது 1.03 கோடி டன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இந்த நிறுவனத்துக்கு 733 மெகாவாட் திறனுடைய மின் உற்பத்தி நிலையம் இருக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 80 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது. கட்டுமானத்துறையை ஊக்கு விக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளால் சிமென்ட் துறை 8 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்று நிறுவனம் கருத்து தெரிவித் திருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
56 mins ago
வணிகம்
22 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago