ரூபாய் மதிப்பு உயர்வு

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வெள்ளிக்கிழமை உயர்ந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 61.07 தர வேண்டியிருந்தது. முந்தைய தின வர்த்தகத்தைவிட 4 காசுகள் குறைந்து வர்த்தகமானது. கடந்த மூன்று மாதங்களில் ரூபாயின் மாற்று மதிப்பு ரூ. 61.07 என்ற நிலையை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

பிற நாடுகளின் மதிப்பில் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்ததும், டாலர் விற்பனை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அதிகரித்ததும் ரூபாயின் மதிப்பு உயரக் காரணமானது. மேலும் பங்குச் சந்தையில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டா ளர்கள் வாங்கியதும் ரூபாய் மதிப்பு உயரக் காரணமாக அமைந்தது. வர்த்தக்த்தின் இடையே ரூபாயின் மதிப்பு ரூ.60.94 என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் ரூபாயின் மாற்று மதிப்பு 68 காசுகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE