ஐடி துறையின் முக்கிய நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் ஐந்து சதவீத அளவுக்கு சரிந்தன. சிட்டி குரூப் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தகுதி இறக்கம் செய்ததே இந்தச் சரிவுக்குக் காரணமாகும்.
வர்த்தகத்தின் முடிவில் 4.73 சதவீதம் சரிந்து 3,650 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் பங்குகளில் அதிக சரிந்தது இன்போசிஸ் பங்குதான். இந்த நிறுவனத்தின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸ் மட்டுமல்லாமல் டெக் மஹிந்திரா மற்றும் மைண்ட் ட்ரீ பங்குகளையும் சிட்டி குரூப் தகுதி இறக்கம் செய்திருந்தது. அதனால் இந்த இரண்டு பங்குகளும் சரிந்தன.
டெக் மஹிந்திரா பங்கு 4.67 சரிந்து 2,396 ரூபாயிலும், மைண்ட் ட்ரீ பங்கு 3.95 சதவீதம் சரிந்து 1,061 ரூபாயிலும் முடிவடைந்தது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.பங்குச்சந்தையில் லேசான சரிவு இருந்தது. சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிந்து 26247 புள்ளியிலும், நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 7843 புள்ளியிலும் முடிவடைந்தன. தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் சரிந்து முடிவடைந்தன. ஐடி குறியீடு 3.44 சதவீதம் சரிதும், ஹெல்த்கேர் குறியீடு 3.27 சதவீதம் சரிந்தும் முடிவடைந்தன.
இன்ஃபோசிஸ் மட்டுமல்லாமல் விப்ரோ பங்கு 4 சதவீதமும், டிசிஎஸ் பங்கு 1.9 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.செவ்வாய்க் கிழமை வர்த்தகத்தின் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 332 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்றிருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago