சீனாவின் ஜிடிபி வளர்ச்சி சரிவு

By ராய்ட்டர்ஸ்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி செப்டம்பர் காலாண்டில் 7.3 சதவீதமாக இருக்கிறது. 2008-ம் ஆண்டு சர்வதேச மந்த நிலைக்கு பிறகு சீனாவின் வளர்ச்சி சரிவது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முந்தைய ஜூன் காலாண்டில் 7.5 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 0.2 சதவீத அளவுக்கு வளர்ச்சி சரிந்திருக்கிறது.

இருந்தாலும் சீனாவின் பொருளாதார வல்லுநர்கள் செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று கணித்திருந்தார்கள். அதைவிட சிறிதளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பாதால் முழு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கான 7.5 சதவீதத்தை எட்ட முடியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 1999-ம் ஆண்டிலிருந்து இதுவரை வளர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சீனா அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி குறைந்திருப்பதால் சீன அரசு வட்டிக் குறைப்பு உள்ளிட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் சந்தை சரிந்தது. உற்பத்தி குறைந்தது, முதலீடு சரிந்தது ஆகிய காரணங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது.

இது குறித்து யூபிஎஸ் வங்கி நிபுணர் வாங் டாவோ கூறும்போது, ரியல் எஸ்டேட் துறை சரிந்ததுதான் இதற்கு காரணம், இதற்கு அரசு சில சலுகைகள் அறிவித்ததால் விற்பனை அதிகரித்தது. இதனால் நான்காம் காலாண்டில் இந்த துறையின் வளர்ச்சி இருக்கும். ஆனால் உற்பத்தி துறையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்