தொடர் விடுமுறை காரணமாக இந்திய பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகம் நடைபெற்றது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 3 தசரா மற்றும் அக்டோபர் 6-ம் தேதி பக்ரித் ஆகியவை விடுமுறை நாட்கள் என்பதால், அக்டோபர் 7-ம் தேதி செவ்வாய் கிழமைதான் இந்திய பங்குச்சந்தைகள் செயல்படும்.
வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிந்து 26567 புள்ளியிலும், நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 7945 புள்ளியிலும் முடிவடைந்தன. முக்கிய நிலைமையான 7950 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது நிப்டி. செப்டம்பர் 10-ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வர இருக்கின்றன. அப்போதுதான் சந்தையின் பாதை தெரியும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வங்கி, கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ், ரியால்டி மற்றும் எப்.எம்.சி.ஜி பங்குகளில் விற்கும் போக்கு அதிகமாக இருந்தது. மாறாக ஐடி குறியீடு 2 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. சென்செக்ஸ் பங்குகளில் விப்ரோ, இன்போசிஸ், எம் அண்ட் எம், டிசிஎஸ் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்தும், மாருதி சுசூகி, டாடா பவர், டாடா ஸ்டீல், கெயில் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தும் முடிவடைந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago