ஒரு நிறுவனத்தில் இயக்குநர்கள் குழு அந்நிறுவனத்தின் கடன் பத்திரத்தை வெளியிட முடிவுசெய்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில், அந்த கடன் பத்திரத்தின் வகை என்ன, முதிர்வு காலம், coupon, எவ்வளவு கடன் பெறுவது, ஒரு பத்திரத்தின் கடன் அளவு என்ன என்பது போன்றவற்றை இயக்குநர்கள் குழு முடிவுசெய்யும்.
ஆரோக்கியமான நிதி இருக்கும் நிறுவனங்கள், கடன் பத்திரம் வெளியிடும்போது, கடன் தொகைக்கு ஈடாக எந்த ஒரு அடமானமும் கொடுக்காது, அதனை unsecured bond என்பார்கள், இதனை debenture என்றும் குறிப்பிடுவர். கடன் பத்திரத்தில் நிறுவனத்தின் சொத்துகளை ஈடாக குறிப்பிட்டிருந்தால், அதற்கு secured bond என்று பெயர்.
அரசு கடன் பத்திரம்
அரசு கடன் பத்திரம், குறுகியகால முதிர்வு (ஒரு வருடத்திற்கும் குறைவான காலம்) இருந்தால் அதனை government bill என்றும் நீண்டகால (ஒரு வருடத்திற்கும் மேலாக) முதிர்வு இருந்தால், அதனை அரசு கடன் பத்திரம் என்றும் கூறுவர். எல்லா அரசு கடன் பத்திரங்களும் unsecured bondகள் தான்.
Zero Coupon Bond
ஒரு கடன் பத்திரத்தில் coupon ஏதும் குறிப்பிடாமல், முதிர்வு தேதியில் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும் என்று இருந்தால் அது zero coupon bond. ‘இந்த கடன் பத்திரத்தை வைத்திருக்கும் நபருக்கு ஒரு வருட முடிவில் ரூ100 கொடுக்கப்படும்’ என்று இருந்தால் அதில் coupon ஏதும் குறிப்பிடவில்லை. இவ்வாறான ஒரு zero coupon bond-ன் முகமதிப்பு ரூ100, இதனை நீங்கள் என்ன விலையில் வாங்குவீர்கள்? சந்தையில் வட்டி விகிதம் 11% என்று இருந்தால், இந்த கடன் பத்திரத்தை ரூ. 90 விலையில் வாங்க முன்வருவீர்கள். ஏனெனில், ரூ 90-க்கு 11% வட்டி ரூ10.
திரும்பப்பெறும் பத்திரம் (Callable Bond)
callable bond என்பது, முதிர்வு தேதிக்கு முன்னரே அதனை வெளியிட்ட நிறுவனம் அந்த கடன் பத்திரத்தை வாங்கிக்கொள்ளும் உரிமையை வைத்திருப்பது.
சில சமயங்களில், நிறுவனத்தின் வட்டி செலவு அதிகமாகிறது என்பதாலும், அல்லது, அதனின் மற்ற நிதி நிலைமை சீரடைந்துவிட்டது என்பதாலும், வெளியிட்ட கடன் பத்திரத்தை மீண்டும் திரும்பபெற ஒரு நிறுவனம் முடிவு செய்யலாம். கடன் பத்திரம் வெளியிடும்போதே இவ்வாறான வாய்ப்பு வரும் என்று தெரிந்தால், நிறுவனங்கள் callable bondகளை வெளியிடும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago