ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனின் பதவி காலம் செப்டம்பர் மாதம் முடிவடைவதையடுத்து அவர் மீண்டும் மறு நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஆதரவில் அவர் மறுநியமனம் செய்யப்படலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜனை தக்கவைப்பது குறித்து ஊடகங்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், அவர் மீதான புகார்கள் குறித்து நிதியமைச்சக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொதுவெளியில் எதிர்கருத்து கூற வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரகுராம் ராஜனின் மூன்று ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. ஆனால் மோடியின் ஆதரவில் ரகுராம் ராஜன் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதாரத்தை மீட்க இந்திய வங்கிகளை புதுப்பிக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளின் வாராக்கடன் சுமை அழுத்தத்திலிருந்து விடுவிக்க ராஜன் தொடர்ந்து கவர்னராக தொடர்வது நல்லது மத்திய அரசு நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜன் மீது பெருமிதம்
ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கினால் அவர் அதை ஏற்றுக் கொள்வார் என்று முன்னாள் நிதியமைச்சக செயலர் அரவிந்த் மாயாராம் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவினுடைய அரசியல் பொருளாதாரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டவர் என்று மாயாராம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து குறிப்பிட்டுள்ள அரசு உயரதிகாரிகள், பிரதமர் மோடி அவரது பதவி கால நீட்டிப்பு குறித்த கருத்துகளை தற்போது பேசவேண்டாம் என்று சமீபத்தில் குறிப்பிட்டுள்ளதும் முக்கியமானது. சமீபத்தில் ‘வால் ஸ்டீரிட் ஜர்னல்’ என்கிற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் மறு நியமனம் குறித்த கேள்விக்கு அவரது பதவி காலம் செப்டம்பர் வரை இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
இதனால் ஊடகங்களுக்கு தேவையில்லாமல் இந்த விவகாரம் குறித்து பேச அவர் விரும்பவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் ராஜன் மீதான புகார்கள் மோடியினுடைய ஆலோசனைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் ரகுராம் ராஜன் மீது மோடி பெருமிதம்தான் கொண்டுள்ளார் என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராஜன் நியமனம் குறித்து பிரதமர் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதேபோல ரகுராம் ராஜனும் தன்னுடைய திட்டம் குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.
ராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் சரியான தேர்வு என்பதை நிரூபிப்பார் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்நிய முதலீட்டாளர்களால் விரும்பப்படும் நபராக ராஜன் இருக்கிறார். தவிர அந்நிய முதலீடு இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. இந்த இடத்தில்தான் ராஜனின் தேவை மோடிக்கு இருக்கிறது. தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி, புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவை வேகமாக வளரும் நாடான இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.
மோடி, ஜேட்லி மற்றும் ராஜன் இணை இதனை சிறப்பாக செய்து வருகிறது. இந்த கூட்டணியை பிரிப்பதற்கான எந்த அவசியமும் இல்லை என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கீதா கோபிநாத் கூறியுள்ளது முக்கியமானது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago