வேலை வாய்ப்பு – மக்கள் தொகை கணக்கெடுப்பு - என்றால் என்ன?

By இராம.சீனுவாசன்

பத்து வருடத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்களின் வெவ்வேறு அம்சங்கள் பற்றி புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் செய்திகள் உண்டு. குறிப்பாக ஒவ்வொருவரும் செய்யும் வேலை (work) பற்றி விபரங்கள் கேட்கப்படும்.

ஒரு வருடத்தில் ஒரு குறைந்தபட்ச காலம் வரை வேலை செய்தவரை worker (வேலையாள்)) என்றும் மற்றவர்களை non-worker (வேலையாள் அல்லாதவர்) என்றும் பிரிக்கப்படும். Worker என்பவரை Main Worker (முதன்மை வேலையாள்) என்றும் Marginal Worker (சிறிய வேலையாள்) என்றும் பிரிக்கலாம். ஒரு வருடத்தில் ஆறு மாதத்திற்கு அதிகமாக ஒருவர் ஒரு உற்பத்தி வேலையை செய்திருந்தால் அவர் Main Worker; ஆறு மாதத்திற்கும் குறைவாக வேலை செய்திருந்தால் அவர் Marginal Worker.

வேலை (Work) என்ற சொல் ஒருவர் செய்யும் உற்பத்தி வேலையை மட்டுமே குறிக்கும், அதற்காக அவர் ஊதியம் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. பலர், குடும்பத் தொழிலில் ஊதியம் வாங்காமல் வேலை செய்யக்கூடும், இதுவும் வேலை என்றே எடுத்துக்கொள்ளப்படும். Non-worker யில் வேலை தேடுபர்வர்களும் (seeking/available for work) அடங்கும், அவர்களை பற்றிய விபரங்களும் சேகரிக்கப்படும்.

Main Worker, Marginal Worker என்ற இரண்டு பிரிவினரின் எல்லா விபரங்களும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படுகிறது. இவர்கள் எந்தெந்த துறைகளில் வேலை செய்கின்றனர், உதாரணமாக, விவசாயிகள், விவசாயக் கூலிகள், விவசாயம் அல்லாத துறைகளில் வேலை செய்வோர் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், இவர்களின் வயது, கல்வி, பால் (ஆண், பெண்), இடம் (நகரம், கிராமம்) என்ற பல விபரங்கள் தெரிய வருவதால், ஆராய்ச்சியாளர்களுக்கும், அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் இந்த புள்ளி விபரங்கள் வெகுவாகப் பயன்படும். ஒவ்வொரு கிராமம், நகரம் வாரியாக இந்த புள்ளிவிபரங்கள் உண்டு.

2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 48.17 கோடி workers இருந்தனர், இது நம் மக்கள் தொகையில் 39.8% ஆகும், இது 1991 ஆண்டு இருந்த 39.1% விட அதிகம். workersஇன் அளவு நகரத்தில் 2001இல் இருந்த 32.3% லிருந்து 2011இல் 35.3% மாக அதிகரித்துள்ளது, அதுவே கிராமத்தில் 41.7% லிருந்து 41.8% ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு வேலையைப்பு தொடர்பான பல விபரங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெறமுடியும். ஆனால் இது பத்து வருட இடைவெளியில் வருவதாலும், இந்த புள்ளி விபரங்களை உடனக்குடன் பெற முடியாததினாலும், இதன் பயன்பாடு சற்று குறைவாகவே உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்