வனிதா நாராயணன் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஐபிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். தெற்காசிய பிராந்தியத்தில் இந்நிறுவனத் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், சேவை மற்றும் சர்வதேச அளவில் பொருள்களை விநியோகித்தல் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கிறார்.

$ சென்னை பல்கலைக்கழகத்தில் சந்தை நிர்வாகவியல் பட்டம் பெற்றவர். பின்னர் ஹுஸ்டன் பல்கலைக் கழகத்தில் முதுகலை நிர்வாகவியலில் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் தொடர்பான நிர்வாகவியல் பட்டம் பெற்றுள்ளார்.

$ 1987-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஐபிஎம் தலைமையகத்தில் பணிக்குச் சேர்ந்த இவருக்கு இந்நிறுவனத்தில் 25 ஆண்டுக்கும் மேலான அனுபவம் உண்டு.

$ 2009-ம் ஆண்டிலிருந்து ஐபிஎம் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக சேவையில் பங்குதாரரானார். இதற்கு முன்பு ஐபிஎம் டெலிகாம் சொல்யூஷன்ஸ் பிரிவின் ஆசிய பசிபிக் பிராந்தியம் மற்றும் சர்வதேச வர்த்தக துணைத் தலைவராக பணியாற்றினார்.

$ ஹியூலெட் பக்கார்ட், இன்டெல் ஆகிய நிறுவனங்களில் பெண் தலைவர்கள் பொறுப்பேற்ற வரிசையில் ஐபிஎம் நிறுவனத் தலைவராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.

$ இந்தியா டுடே வெளியிட்டுள்ள தொழில் துறையில் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

37 mins ago

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்