ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் (எஸ்பிஎச்) இந்த ஆண்டு 14 புதிய கிளைகளை சென்னை மண்டலத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 4 புதிய கிளைகள் திறக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. 1,500 கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கி, நடுத்தர மற்றும் சிறு, குறுந் தொழில்களுக்குக் கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ளது. 10 கிளைகள் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் தொடங்கப்படும்.
சென்னை மண்டலம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்படுகிறது. மற்றொரு மண்டலம் கோவையாகும். சென்னை மண்டலத்தில் ஏற்கெனவே 14 கிளைகள் உள்ளன. மேலும் 14 புதிய கிளைகள் திறக்கப்பட்டவுடன் சென்னை மண்டலத்தின்கீழ் செயல்படும் கிளைகளின் எண்ணிக்கை 28 ஆக உயரும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படும் கிளைகளின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்.
இந்த ஆண்டை எம்எஸ்எம்இ துறை ஆண்டாக எஸ்பிஎச் அறிவித்து நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு ஊக்கமளிக்க முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ரூ. 35 கோடியை இத்துறைக்கு கடனாக அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்த வங்கி சில்லறை வணிகக் கடனாக ரூ. 650 கோடியை அளித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக மேலும் பல தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களைத் தொடங்கவும் வங்கி முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
7 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago